லிட்டில் இந்தியாவில் களைகட்டவுள்ள தைத்திருநாள் நிகழ்ச்சிகள்

லிட்டில் இந்தியாவில் மீண்டும் இவ்வாண்டு தைத்திருநாள் பல புதிய அம்சங்களுடன் களைகட்டவுள்ளது. ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் கைகோத்து பொதுமக்களுக்காகப் பற்பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அவ்வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் லிட்டில் இந்தியாவின் தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியிலும், கிளைவ் ஸ்திரீட்டின் ‘பொலி’ திறந்த வெளியிலும் 14 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 5) பிற்பகல் ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரை விக்னேஷ் மாட்டுப் பண்ணையிலிருந்து கால்நடைகள் லிட்டில் இந்தியாவின் கேம்பெல் லேனுக்கு வருகை புரியவுள்ளன. இம்முறை கால்நடைகளின் வருகையை பொதுமக்கள் காணவேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னர் அக்கால்நடைகள் ‘பொலி’ திறந்த வெளியில் பொங்கல் திருநாளுக்காக அமைக்கப்படவிருக்கும் கூடாரத்தில் வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் இம்மாதம் 16ஆம் தேதி வரை கால்நடைகளைக் காண அனுமதி இலவசம்.

பொங்கல் திருநாளின் ஒளியூட்டு விழா இந்த சனிக்கிழமை (ஜன. 6) மாலை 6.30 மணிக்கு ‘பொலி’யில் நடைபெறும். அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை சிராங்கூன் சாலை முழுவதும் வண்ணமயமான ஒளியூட்டில் மிளிரவிருக்கிறது. ஒளியூட்டு விழாவை அமைச்சர் கிரேஸ் ஃபூ தொடங்கி வைப்பார்.

இம்மாதம் 6 மற்றும் 13ஆம் தேதிகளில் மட்டும் லிட்டில் இந்தியாவின் கேம்பெல் லேனில் லிஷா சென்ற ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு அறிமுகப்படுத்திய ‘தேக்கா ராஜா’ எனும் யானை உருவச் சின்னத்தோடு பொதுமக்கள் புகைப்படம் எடுத்துகொள்ளலாம்.

ஒளியூட்டு விழாவின் மறுநாள் மாலை ‘இக்காலத்து இளையர்கள்’ எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ‘பொலி’யில் இடம்பெறவிருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் திருநாளின் விழுமியங்களையும், பாரம்பரியத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தைத்திருநாள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

அதே நாள்களில் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் விதமாக அவர்களுக்கு மதிய வேளையில் ‘பொலி’யில் சிறப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுற்றுப்பயணிகளுக்கு முதல்முறையாக லிஷா ‘பிக் பஸ்’ எனும் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 15ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அது நடைபெறும்.

இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து, 15ஆம் தேதி வரை, மாலை ஏழு மணிக்கு ‘பொலி’யில் கலாசார, கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்தியாவைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்துகொள்வர். 14ஆம் தேதி, சிறப்பு ‘மண்வாசனை’ நிகழ்ச்சி நடைபெறும்.

சிறுவர்களுக்காக 13ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் வண்ணம் தீட்டும் போட்டி நடைபெறவுள்ளது.

பொங்கல் திருநாளைக் கொண்டாட்ட உணர்வாகக் கருதுவதற்கு அப்பாற்பட்டு ஏழ்மையில் இருப்பவர்களையும் நினைத்துப் பார்க்கும் விதத்தில் மூன்று முதியோர் இல்லங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு இலவச பொங்கல் சோறு விநியோகிக்கப்படும். அத்துடன், இம்மாதம் 15லிருந்து 17ஆம் தேதி வரை ‘பொலி’யில் சுற்றுப்பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பொங்கல் சோறு இலவசமாக விநியோகிக்கப்படும்.

பொங்கல் திருநாளின் இரண்டாவது நாள் கொண்டாட்டமாக விக்னேஷ் மாட்டுப் பண்ணை உரிமையாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து 16ஆம் தேதி, பிற்பகல் நேரத்தில் ‘பொலி’யில் மாட்டுப் பொங்கல் வழிபாட்டை நிகழ்த்துவார்கள்.

இம்மாதம் 20ஆம் தேதி காலை, வெளிநாட்டு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் பொங்கல் சோறு சமைக்கும் போட்டியில் கலந்துகொள்ளலாம். போட்டி ‘பொலி’யில் இடம்பெறும்.

இந்திய மரபுடைமை நிலையம் இந்த ஆண்டு, ‘சூரிய ஒளி அறுவடை’ என்னும் கருப்பொருளில் பொங்கல் திருநாளுக்காக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

தைத்திருநாள் வரவேற்பு நிகழ்ச்சி இந்த வாரயிறுதியிலும், அடுத்த வாரயிறுதியிலும் நடைபெறும். பொதுமக்கள் ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான தைத்திருநாள் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, புதிதாக கரகம் செய்யும் பயிலரங்கு, சமையல் வல்லுநர் அனில் ரவீந்திரன் செய்துகாட்டும் சமையல், வசந்தம் தொலைக்காட்சி பிரமுகர்கள் இருவருடன் நடைபெறும் லிட்டில் இந்தியா தடம் போன்ற அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

பொதுமக்கள் நடவடிக்கைகள் சிலவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். புதன்கிழமை பிற்பகல் இந்திய மரபுடைமை நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்விவரங்கள் பகிரப்பட்டன.

https://peatix.com/ இணையத்தளத்தில் இந்திய மரபுடைமை நிலையத்தின் நடவடிக்கைகளுக்கான மேல்விவரங்கள் உள்ளன.

லிஷா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள் பற்றிய மேல்விவரங்களுக்கு www.pongal.sg இணையத்தளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!