‘ஜெனரேட்டிவ் ஏஐ’க்கு புதிய ஆளுமை கட்டமைப்பு

உலகின் கருத்தை அறிய சிங்கப்பூர் விருப்பம்

‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு தகவல் உருவாக்கத்துக்கான மாதிரி ஆளுமை கட்டமைப்பை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. அதற்கு உலக நாடுகளின் கருத்தை அறியவும் அது முற்படுகிறது.

2019ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது அதற்கும் மேலாக புதிய ஆளுமை கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டமைப்பை, ‘ஏஐ வெரிஃபை’ அறநிறுவனமும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த நவீன தொழில்நுட்பம் தொடர்பான உலகளாவிய விவாதத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் பங்களிப்பு இடம்பெறுகிறது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஜனவரி 16ஆம் தேதியன்று தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.

செயற்கை நுண்ணறிவு நாடு அளவில் மட்டும் செய்யவிட முடியாது என்று அவர் கூறினார்.

உலகளாவிய விவாதத்தில் சிங்கப்பூரின் பங்களிப்பைக் காட்டுவதற்காக புதிய கட்டமைப்பை முன் வைக்கவும் அது பற்றி கருத்துகளை அறியவும் உலகப் பொருளியல் கருத்தரங்கு அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தத் துறை மிகவும் புதியது. இதில் முன்னேற்றம் அடைய யாராவது ஒருவர் திட்டத்தை முன் வைத்தாக வேண்டும். அப்போதுதான் உலகளாவிய விவாதத்தை மேலும் வளமாக்க முடியும் என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.

‘எம்ஜிஎஃப் 2.0’ எனும் புதிய ஆளுமைக் கட்டமைப்பு 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டில் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0’ என்பதையொட்டி புதிய கட்டமைப்பு முன்னேற்றம் கண்டுள்ளது.

‘சாட்ஜிபிடி’ ‘மிட்ஜர்னி’ போன்ற பிரபல உள்ளடக்கங்களை உருவாக்கும் தளங்களை ‘ஜெனரட்டிவ் ஏஐ’ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருக்கிறது. அதே சமயத்தில் மோசடி, நோய், ஊழியர் விமான அபாயங்களை கணிக்கும் சாதனங்கள் பாரம்பரிய செயற்கை நுண்ணறிவில் அடங்கியுள்ளது.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் 2023ல் உருவாக்கப்பட்ட ‘ஏஐ வெரிஃபை’ அறநிறுவனத்தில் கூகல், ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபார்ஸ் போன்றவை உறுப்பினர்களாக உள்ளன.

பழைய கட்டமைப்பிலிருந்து எத்தகைய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டோம் என்று கேட்கப்பட்டதற்கு, “2019ல் பழைய கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது, நிதிச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு போன்ற வெவ்வேறு துறைகள் தங்களுக்கென்று தனித்துவமான கட்டமைப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று கருத்துரைத்தன. அதன் விளைவாகத்தான் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டது,” என்றார் அமைச்சர் டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!