டிஃபனி நிறுவன வைர மோதிரத்துக்கு பதில் மாற்று மோதிரம் வைத்தவருக்கு சிறை

சீன நாட்டவர் ஒருவர் எடுபிடி வேலை பார்த்து வந்தார்.

வூ யோச்சுவான் என்ற அவரைத் தொடர்புகொண்ட ஆடவர் ஒருவர் விரைவில் பணம் ஈட்டக்கூடிய, அபாயமிக்க பணியில் ஈடுபட ஆர்வம் உள்ளதா என்று வினவினார். அதன்படி, டிஃபனி அண்ட் கோ நிறுவனத்தில் உள்ள உண்மையான வைர மோதிரத்தை அங்கிருந்து எடுத்து அதற்கு பதிலாக போலியான மாற்று மோதிரத்தை வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

இதற்கு ஒத்துக்கொண்ட வூ, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மரினா பே சேண்ட்சில் உள்ள ஷாப்ஸ் என்ற கடைத்தொகுதியில் உள்ள டிஃபனி கடையில் ஆடவர் கூறியபடி குற்றச்செயல் புரியச் சென்றார்.

மோதிரத்தை வாங்குவதுபோல் நடித்த வூ, உண்மையான மோதிரத்துக்கு பதில் போலியான மோதிரத்தை வைத்துள்ளார். ஆனால், போலி மோதிர $318,000 விலைப் பட்டை உண்மையான வைர மோதிரத்தில் உள்ள விலைப்பட்டையிலிருந்து மாறுபட்டு இருந்ததைப் பார்த்த டிஃபனி நிறுவனத்தின் மேலாளர் வூவை கையும் களவுமாக பிடித்தார்.

பின்னர் மேலாளரின் சக ஊழியரான ஆடவர் ஒருவரைக் கொண்டு வூவை உடல் பரிசோதனைக்கு ஆளாக்கவிருந்த தருணம், வூ தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை திருப்பிக் கொடுத்து தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார்.

திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொண்ட வூக்கு, 44, வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) மூவாண்டு, நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அரசாங்கத் துணை வழக்கறிஞர் கெல்லி இங் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வூவை சென் ஹன்போ என்பவர் தொடர்புகொண்டு அந்த அபாயமிக்க திருட்டு வேலையில் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டதாகத் தெரிவித்தார்.

இந்தத் திருட்டுச் செயலுக்கு எவ்வளவு கிடைக்கும் என சென் கூறவில்லை, குறைவில்லாமல் பணம் கிடைக்கும் என்று மட்டுமே சென் கூறினார். இருந்தும் வூ திருட்டுக்கு ஒப்புக்கொண்டார். வூ, சென் இருவரும் எங்குச் சந்தித்து திட்டம் தீட்டினர் என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!