நொடித்துப் போவதிலிருந்து பாதுகாப்பு கோரும் சிங்கப்பூரைத் தளமாகக்கொண்ட நிறுவனம்

40 பில்லியன் அமெரிக்க டாலர் (53.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மின்னிலக்க நாணய வீழ்ச்சியை அடுத்து விசாரணையில் இருக்கும் டோ குவோன் இணை நிறுவனராக உள்ள நிறுவனம், நொடித்துப் போவதற்கு எதிரான பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் தாக்கல் செய்துள்ளது.

டெர்ரா ஸ்டாப்லெகாயின் தொடர்பிலான, சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட டெர்ராஃபார்ம் லேப்ஸ், ஜனவரி 22 அன்று டெலவேர் மாநிலத்தில் திவால் விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை செய்ததாக கூறியது.

ஸ்டாப்லெகோயின் என்பது ஒரு மின்னிலக்க நாணயம். இது பொதுவாக 1 அமெரிக்க டாலர் மதிப்பீட்டைக் கொண்டது. ஃபியட் நாணயம் அல்லது பிற மின்னிலக்க நாணயங்கள் அல்லது பொருள்களால் ஒன்றுக்கு ஒன்று என இணைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை “டெர்ரா சமூகத்தின் செயல்பாடுகளையும் ஆதரவையும் தொடர உதவும்” என்று நிறுவனம் கூறியது.

வழக்கின்போது ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான அனைத்து நிதிக் கடப்பாடுகளையும் பூர்த்தி செய்ய விரும்புவதாகவும், அவ்வாறு செய்ய கூடுதல் நிதி வசதிச் சேவை தேவையில்லை என்றும் டெர்ராஃபார்ம் லேப்ஸ் கூறியது. 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான வரம்பில் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை நிறுவனம் பட்டியலிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெரஸ், லூனாவா எனும் ஸ்டாப்லெகோயினால் ஆதரிக்கப்பட்டது, இரண்டும் டெர்ரா பிளாக்செயினுடன் இணைக்கப்பட்டன.

இரு மின்னிலக்க நாணயங்களும் மே 2022ல் பெரும் சரிவை எதிர்கொண்டன. இதனால் 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை முதலீட்டாளர்கள் இழந்தனர்.

ஏப்ரல் 2018 முதல் மே 2022ல் திட்டம் வீழ்ச்சியடையும் வரை, டெர்ராஃபார்ம் லெப்சும் குவோனும் முதலீட்டாளர்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை திரட்டினர். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கிரிப்டோ சொத்து பத்திரங்களை வழங்குவதன் மூலமும் விற்பனை செய்வதன் மூலமும், பல பதிவு செய்யப்படாத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டன என்று அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) குற்றம் சாட்டியுள்ளது.

தென் கொரிய நாட்டவரான குவோன், மோசடி, சந்தையை சூழ்ச்சியாக கையாண்டது தொடர்புடைய அமெரிக்க குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார். அவர் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொண்டெனேகுரோவில் கைது செய்யப்பட்டார். அவரை ஒப்படைக்குமாறு கோரிக்கையும் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!