உள்ளூர் உற்பத்தித்துறை 2.5 விழுக்காடு சுருங்கியது

சிங்கப்பூரின் உற்பத்தித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத விதமாக 2.5 விழுக்காடு சுருங்கியது.

உயிர்மருத்துவத்துறையில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக இந்நிலை ஏற்பட்டது.

இந்தத் தகவலைப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஜனவரி 26ஆம் தேதியன்று வெளியிட்டது.

டிசம்பர் மாதத்தில் உள்ளூர் உற்பத்தி ஒரு விழுக்காடு அதிகரிக்கும் என்று நவம்பர் மாதத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தது.

உயிர்மருத்துவத்துறையைச் சேர்க்காமல், உள்ளூர் உற்பத்தித்துறை கடந்த டிசம்பர் மாதம் 0.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த அடிப்படையில் உள்ளூர் உற்பத்தித்துறை 4.3 விழுக்காடு சுருங்கியது.

உயிர்மருத்துவத்துறையைச் சேர்க்காமல், உள்ளூர் உற்பத்தித்துறை கடந்த ஆண்டு 3.6 விழுக்காடு சுருங்கியது.

உள்ளூர் உற்பத்தித்துறையில் மின்னணுவியல் துறை 45 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

இதுவே ஆக அதிக வளர்ச்சி கண்டது.

ஆண்டு அடிப்படையில் அது டிசம்பர் மாதத்தில் 6.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

கடந்த நவம்பர் மாதத்தில் மின்னணுவியல் பதிவு செய்த 7.3 விழுக்காடு வளர்ச்சியுடன் இது குறைவு.

மின்னணுவியல் துறையின் ஒரு பகுதியான பகுதி மின்கடத்திக்கான உற்பத்தி 17.7 விழுக்காடு அதிகரித்தது.

திறன்பேசி உற்பத்தி போன்றவற்றில் அதற்கான தேவை அதிகரித்துள்ளதால் பகுதி மின்கடத்திக்கான உற்பத்தி வளர்ச்சி கண்டது.

இருப்பினும், மற்ற மின்னணுவியல் பாகங்களுக்கான உற்பத்தி 7.8 விழுக்காடு சுருங்கியது.

கடந்த டிசம்பர் மாதம் உயிர்மருத்துவத்துறைக்கான உற்பத்தி ஆக அதிகமாகச் சுருங்கியது. ஆண்டு அடிப்படையில் அது 23.9 விழுக்காடு சரிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!