‘மேற்கு உதயம்’: களைகட்டிய இந்திய கலை கலாசார விழா

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஐந்து இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் பைனியர் பகுதிக் குழுவும் இணைந்து நடத்திய ‘மேற்கு உதயம்’ இந்திய கலை கலாசார விழா, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் நடைபெற்றது.

தேசிய வளர்ச்சி அமைச்சர், சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அடித்தள அமைப்பின் ஆலோசகர் ஆங் வெய் நெங், ரேச்சல் ஓங், பைனியர் அடித்தள அமைப்பின் ஆலோசகர் பேட்ரிக் தே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய அங்கங்கள் இடம்பெற்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இவ்விழா, நான்காம் முறையாக இவ்வாண்டு நடைபெற்றது. ஏறத்தாழ 1500 பங்கேற்பாளர்களுக்கு உணவு, ‘கச்சாங் புத்தே’, ‘தே தாரிக்’ ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கான பஞ்சு மிட்டாய், சோளப்பொறி ஆகியவையும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ‘மதுபானி’ எனும் பாணியில் சிறு வரைகலை பயிலரங்கு, ரங்கோலி, சேலை கட்டும் பயிலரங்கு, சிறு கைவினைப் பொருள்கள் செய்முறை விளக்கம், மருதாணி, பூ கட்டும் பயிலரங்கு எனப் பல்வேறு இந்திய கலை அம்சங்கள் நிறைந்திருந்தன.

பரமபதம், பல்லாங்குழி, ஆடுபுலியாட்டம், பம்பரம், ஐந்தாங்கல் எனப் பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. சிங்கப்பூர் காவல்துறை சார்பில் மோசடிக்கு எதிரான விழிப்புணர்வு அங்கமும் இருந்தது. முதலுதவி குறித்த அறிமுகம் தொடங்கி பல அமைப்புகளின் கடைகள் இடம்பெற்றன.

இவ்விழா குறித்து பகிர்ந்த ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கி. ராஜாராம், 70, “இந்தக் கலை கலாசார விழா, மரபு நிகழ்வுகளை இந்தியர்கள் மறக்காமல் இருக்கவும் வரும் தலைமுறையினர் இவற்றை அனுபவிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கொள்ளைநோய்க் காலத்தில் நடக்காமல் போன இந்நிகழ்வு, மீண்டும் களைகட்டியிருப்பது மகிழ்ச்சி,” என்றார்.

ஏற்பாட்டுக் குழுவின் துணைத்தலைவர், நசீர் கனி, 65 “பாரம்பரிய உணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், மக்களுக்குத் தேவைப்படும் விழிப்புணர்வுக் கருத்துகளையும் எடுத்துரைக்கும் விதமாக இவ்விழா அமைந்துள்ளது,” என்றார்.

மேடையில் நடைபெற்ற பல்வேறு இசை, நடன நிகழ்வுகளைப் பங்கேற்பாளர்கள் கண்டு களித்தனர். இதில் பங்கேற்ற ஆயர் ராஜா பகுதியிலிருந்து வந்திருந்த அஸ்வினி ராகோத்தமன், 28, “நான் என் தோழிகளுடன் இங்கு வந்துள்ளேன். குடும்பம் குழந்தைகளுடன் வந்திருக்கும் பலரைப் பார்க்கவும் பேசவும் வாய்ப்பு இத்தகைய விழா மூலம் கிடைக்கிறது,” என்றார்.

பாண்டான் கார்டன்ஸ் பகுதியிலிருந்து வந்திருந்த ரம்யா, 33, “குழந்தைகள் குதூகலமாக உள்ளனர். அனைவருடனும் ஒன்றிணைந்து பாரம்பரிய கலைகளைக் கண்டுகளிப்பதும் மரபு விளையாட்டுகளை விளையாடுவதும் அவர்களுக்குப் புதுவித அனுபவமாக இருக்கிறது,” என்றார்.

இவ்விழாவில் பணியாற்றிய தொண்டூழியர் அமுதா, 62 , “25 ஆண்டுகளாக வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் வசிக்கிறேன். இங்கு இனப் பாகுபாடின்றி பலரும் கலந்து கொள்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இதில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

பலருக்கும் ரங்கோலி வரைய உதவிய தொண்டூழியர் அஞ்சனா தேவி, 56, “இங்கு பெண்களும் குழந்தைகளும் ரங்கோலி வரைந்து பழகுவதற்கு நான் உதவியது புது அனுபவமாக இருந்தது,” என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!