சில்லறை விற்பனை 0.4% குறைந்தது

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 0.4 விழுக்காடு குறைந்தது.

கடந்த நவம்பர் மாதம் சில்லறை விற்பனை வளர்ச்சி கண்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பரில் விகிதம் குறைந்தது.

காலத்துக்கேற்ப சில அம்சங்களைக் கருத்தில்கொண்ட பிறகு மாத அடிப்படையில் டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை 1.5 விழுக்காடு குறைந்தது. நவம்பரில் சில்லறை விற்பனை 0.5 விழுக்காடு அதிகரித்திருந்தது.

சிங்கப்பூர் புள்ளி விவரத்துறை (சிங்ஸ்டாட்) திங்கட்கிழமையன்று (5 பிப்ரவரி) இத்தகவல்களை வெளியிட்டது.

வாகனங்களைத் தவிர மற்ற பிரிவுகளில் சில்லறை விற்பனை மூன்று விழுக்காடு குறைந்தது. நவம்பரில் இந்த விகிதம் 0.1 விழுக்காடு அதிகரித்திருந்தது.

டிசம்பர் மாதம் பதிவான சில்லறை வர்த்தகப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 4.7 பில்லியன் வெள்ளி. அவற்றில் 13.1 விழுக்காடு இணையத்தில் இடம்பெற்ற சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகளாகும்.

நவம்பரில் இந்த விகிதம் 15.3 விழுக்காடாகப் பதிவானது.

கணினி, தொலைத்தொடர்புப் பொருள் விற்பனையில் 49.2 விழுக்காடு இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட சில்லறை விற்பனைப் பரிவர்த்தனைகளாகும். அறைகலன், வீட்டுப் பொருள்களுக்கான விற்பனையில் 31 விழுக்காடு இணையத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேரங்காடிகள், பெரும் பேரங்காடிகளில் வாங்கப்பட்ட பொருள்களில் 12.1 விழுக்காடு இணையம்வழி வாங்கப்பட்டன.

கேளிக்கை பொருள்கள், புத்தகங்கள், அறைகலன், உள்ளிட்டவற்றின் சில்லறை விற்பனை ஆகக் குறைவான விகிதத்தில் குறைந்தது.

14 தொழில் துறைகளில் நான்கு துறைகளில் மட்டுமே டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை அதிகரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!