சிங்கப்பூரின் அயன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் நிலா கருப்பொருளில் விற்கப்பட்ட கைக்கடிகாரத்தைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச் சென்றனர்.
‘மூன்சுவாட்ச்’ என்று அழைக்கப்படும் அந்தக் கைக்கடிகாரத்தை ஓமெகா, சுவாட்ச் நிறுவனங்கள் தயாரித்தன.
2022ஆம் ஆண்டு முதல் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உருவெடுத்துள்ளது அந்நிறுவனங்களின் கைக்கடிகாரம்.
செவ்வாய்க்கிழமை வெளியான ‘மூன்சுவாட்ச்’ கைக்கடிகாரத்தின் விலை 430 வெள்ளி.
திங்கட்கிழமை இரவு 7 மணி முதலே கடைக்கு வெளியே கைக்கடிகாரத்தை வாங்க மக்கள் வரிசை பிடித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்குக் கடை திறந்தபோது அங்குக் கிட்டத்தட்ட 150 பேர் வரிசையில் நின்றனர்.
வாடிக்கையாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கடைக்குள் அனுமதித்து கடை அதிகாரிகள் வியாபாரம் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை வெளியான ‘மூன்சுவாட்ச்’ கைக்கடிகாரத்தை எத்தனை பேர் வாங்கினர் என்ற விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.