ஜோயாலுக்காசின் புதிய ‘சீதா கல்யாணம்’ ஆபரணங்கள்

ராமாயணத்தை மையமாகக் கொண்டு காலத்துக்கும் அழியாத அதில் வர்ணிக்கப்பட்டுள்ள காதல், பக்தி தொடர்பான அம்சங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய ஆபரணங்களை ஏப்ரல் 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.

‘சீதா கல்யாணம்’ என்ற பெயரில் மணப்பெண்களுக்கென இந்த ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ராமருக்கும் சீதாவுக்கும் இடையிலான காதல், உன்னத உறவு ஆகியவற்றை கொண்டாடும் வகையில் ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்த ஆபரணங்களை அதன் வாடிக்கையாளர்களின் கண்முன் கொண்டு வந்துள்ளது.

அனுபவம்வாய்ந்த பொற்கொல்லர்களால் மிகுந்த சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள், இந்தியப் பாரம்பரியத்தின் அழகை மெருகூட்டிக் காட்டுகின்றன.

“சீதா கல்யாணம் ஆபரணங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் செழுமைமிக்க இந்திய மரபுடைமையைக் கொண்டாடுகிறோம். உலகிலேயே மிகச் சிறந்த இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் மேலோங்கி இருக்கும் தெய்வீகக் காதலுக்கு ஜோயாலுக்காஸ் அஞ்சலி செலுத்துகிறது,” என்று ஜோயாலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் பால் ஆலுக்காஸ் தெரிவித்தார்.

“இந்தியப் பாரம்பரியத்துக்கும் நெறிமுறைகளுக்கும் தமது வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் இக்கால, நவீன மணப்பெண்களுக்கு ஏதுவான, தனித்துவம் வாய்ந்த ஆபரணங்களாக ‘சீதா கல்யாணம்’ ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர் தரம், ஈடு இணையற்ற வடிவமைப்பு ஆகியவற்றை பிரதிநிதிக்கும் ஆபரணங்களை உருவாக்க ஜோயாலுக்காஸ் இலக்கு கொண்டுள்ளது. இந்தக் கொள்கைக்கு உட்பட்டு புதிய ‘சீதா கல்யாணம்’ ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

‘சீதா கல்யாணம்’ அறிமுக விழா சிராங்கூன் சாலையில் உள்ள ஜோயாலுக்காசின் பிரதான நகைக்கடையில் நடைபெற்றது.

அப்போது சீதா கல்யாணம் தொகுப்பில் நான்கு ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஒவ்வோர் ஆபரணமும் வெவ்வேறு திருமணச் சடங்கைப் பிரதிபலிக்கிறது.

“சிங்கப்பூர் இந்தியச் சமூகம் அவற்றின் பாரம்பரியத்துடன் உணர்வுபூர்வமான இணைப்பைக் கொண்டுள்ளது. ‘சீதா கல்யாணம்’ ஆபரணங்கள் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு. அவை தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வோர் ஆபரணமும் ஒரு கதையை எடுத்துக்கூறுகிறது,” என்று ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் வட்டார மேலாளர் ஃபிரேடி பால் தெரிவித்தார்.

‘சீதா கல்யாணம்’ ஆபரணங்கள் லிட்டில் இந்தியாவில் ஜோயாலுக்காசுக்குச் சொந்தமான மூன்று கடைகளிலும் உலகெங்கும் 11 நாடுகளில் இருக்கும் அதன் கடைகளிலும் விற்கப்படுகின்றன.

“சிங்கப்பூரில் பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட நகைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. திருமண விழாக்கள், ஆண்டு விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆபரணங்களை வடிவமைக்கிறோம்,” என்று ஜோயாலுக்காசின் சந்தைப்படுத்துதல் பிரிவின் மேலாளர் (அனைத்துலக செயல்முறை) திலீப் பி. நாயர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!