வீட்டு விலைகள் ஏறினாலும் சொத்துச் சந்தை நிலைப்படும்: டெஸ்மண்ட் லீ

ஒவ்வொரு காலாண்டு அடிப்படையிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக, தனியார் வீட்டு விலைகள் மாறலாம்.

ஆனால், சொத்துச் சந்தை நிலைப்படுவது தொடரும் என்று அதிகாரிகள் நம்புவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

பூன் லே வட்டாரத்தில் ‘கிரீன்ஃபிளை அலாட்மண்ட் கார்டன்’ என்ற சொத்து விற்பனை நிகழ்வில் சனிக்கிழமை (ஏப்ரல் 27) அன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லீ, அடுத்த சில காலாண்டுகளில் அரசாங்கம் வீட்டு விலைகளின் போக்கை கவனமாகக் கண்காணிக்கும் என்று கூறினார்.

ஆகக் கடைசியாக வீவக, தனியார் வீட்டு விலை தொடர்பான தரவுகள் வெளிவந்த நிலையில், அமைச்சரின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு விலைகள் 1.8% ஏற்றம் கண்டுள்ளது. இது இதற்கு முந்திய காலாண்டின் 1.1% ஏற்றத்தை மிஞ்சியுள்ளதாகக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் 1.4% ஏற்றம் கண்டதைக் காட்டுகிறது.

“பருவத்துக்கு பருவம், காலாண்டுக்கு காலாண்டு வீவக வீட்டு விலைகள் ஏற்றஇறக்கமாக இருக்கும். ஆனால், ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் வீட்டு விலைப் போக்கை கவனித்தால் சென்ற ஆண்டின் மறுவிற்பனை வீட்டு விலைகள் அதற்கு முந்திய 2022ஆம் ஆண்டின் விலையேற்றத்தைவிடக் குறைவாக இருந்துள்ளது. அதேபோல் 2022ஆம் ஆண்டின் விலையேற்றம் அதற்கு முந்திய ஆண்டின் ஏற்றத்தைவிடக் குறைவாக இருந்துள்ளது,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ விளக்கினார்.

இதற்கு கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் ஏற்பட்ட கட்டுமான காலதாமதம் உட்பட பல காரணங்கள் உள்ளன என்ற அமைச்சர், கழகம் தேவைகேற்ப கட்டப்படும் வீட்டு விற்பனை, தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

தேவைகேற்ப கட்டி விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டுவரை 100,000 இருக்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம்வரை 67,000க்கும் மேற்பட்ட வீடுகள் சந்தைக்கு வந்துள்ளன.

இத்துடன், தனியார் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் அரசாங்கத்தின் நில விற்பனைத் திட்டத்தின்கீழ், 10 நிலப் பகுதிகளில் கிட்டத்தட்ட 5,450 தனியார் வீடுகள் விற்பனைக்கு வரும். இவை 2021ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏழாவது தடவையாக அதிக அளவில் விற்பனைக்கு விடப்படும் தனியார் வீடுகளாகும்.

உறுதிப்படுத்தப்பட்ட நிலப் பகுதியில் உள்ள வீடுகள் அதற்குரிய காலநேரப்படி, அதற்கான தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், விற்பனைக்கு விடப்படும்.

“அத்துடன், பல சொத்துச் சந்தை நடவடிக்கைகளும் அமல்படுத்தப்படும். அதன்படி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக, தனியார் வீடுகள் யாவும் பொருளியலின் முக்கியக் கூறுகளுடன் ஒத்திருப்பது உறுதிசெய்யப்படும்,” என்றும் அமைச்சர் லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!