சிங்க‌ப்பூர்

பாழான ‘கார்ட்லைஃப்’ ரத்த அலகுகளுக்கான இழப்பீடுகளையும், திரும்பக் கொடுக்கப்படக்கூடிய பணத்தையும் சுகாதார அமைச்சு இடம்பெறாத வர்த்தகக் குத்தகைகள் நிர்வகிப்பதால் அரசாங்கம் அத்தகைய விவகாரங்களில் தலையிட முடியாது என்று டாக்டர் ஜனில் புதுச்சேரி மே 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வுகளில் போதைப்பொருள் கடத்துவோருக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்திருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இது குறித்த முழுச் செய்தியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் எப்-16 விமானம் விபத்துக்குள்ளானது. தெங்கா விமானத் தளத்தில் புதன்கிழமை (மே 8) பிற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும்போது ஏற்பட்ட பிரச்சினையால் அந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஊழியரணியில் குறைந்தது 30 விழுக்காட்டு வெளிநாட்டினரைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் விகிதம் கடந்த பத்தாண்டில் மாற்றமின்றி நிலையாக 20 விழுக்காட்டிலேயே இருந்துள்ளது.