டெல்லி அபாரம்; திக்குமுக்காடியது கோல்கத்தா அணி

புது­டெல்லி: ஐபிஎல் கிரிக்­கெட் போட்டியில் நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கோல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்­கெட்டுகள் வித்­தி­யா­சத்­தில் டெல்லி கேப்­பிட்­டல்ஸ் வீழ்த்­தி­யது.

முத­லில் பந்தடித்த கோல்­கத்தா 20 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதி­க­பட்­ச­மாக ஜேசன் ராய் 43 ஓட்டங்களும் ஆந்த்ரே ரசல் 38 ஓட்டங்களும் எடுத்­த­னர்.

டெல்லியின் தரப்­பில் இஷாந்த் சர்மா, நோர்க்கியா, அக்­சர் பட்­டேல், குல்­தீப் யாதவ் தலா 2 விக்­கெட்டுகளைக் கைப்­பற்றி­னர்.

இதனைத் தொடர்ந்து பந்தாடிய டெல்லி அணி 19.2 ஓவ­ர்களில் 6 விக்­கெட்டுகள் இழப்­புக்கு 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்­றது.

அணித் தலைவர் டேவிட் வார்­னர் 57 ஓட்டங்கள் எடுத்­தார். ஆறாவது ஆட்­டத்­தில் விளை­யா­டிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்­றி­யா­கும். கோல்­கத்தா நான்காவது முறையாகத் தோல்வியின் பிடியில் சிக்கியது.

“இரண்டு புள்­ளி­களைப் பெறு­வது மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளோம். எங்­க­ளின் பந்துவீச்சு வீரர்களை நினைத்து நாங்­கள் பெருமைப் படு­கி­றோம்.

“பவர் பிளே­யில் விக்­கெட்­டு­களை வீழ்த்த வேண்­டும் என்று திட்­ட­மி­ட்டோம். அதைச் சரி­யாக செய்­தோம்.

“நாங்­கள் பந்தடிப்பில் மீண்­டும் விக்­கெட்­டு­களை இழந்­தோம். இருப்பினும், ஒரு­வருக்கொரு­வர் நாங்­கள் ஆதரவாக இருந்தோம். மேம்­படுத்த வேண்­டிய பகு­தி­கள் குறித்து கலந்துரையாடினோம். நாங்­கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம்,” என்று டெல்லி அணியின் தலைவர் டேவிட் வார்னர் கூறினார்.

“நாங்­கள் 15 முதல் 20 ஓட்டங்கள் குறை­வாக எடுத்து விட்­டோம். ஆடு­க­ளம் எளி­தா­ன­தல்ல என்­பது எங்­க­ளுக்குத் தெரி­யும். நான் அதிக நேரம் பந்தடித்திருக்க வேண்­டும்.

“குறைந்த ஓட்ட எண்ணிக்கையைத் தற்காக்கப் போராடினோம்,” என்று கோல்கத்தா அணித் தலைவர் நிதீஷ் ரானா கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!