எஃப்ஏ கிண்ணம்: முதன்முறையாக இறுதியாட்டத்தில் மோதும் யுனைடெட், சிட்டி

லண்டன்: இங்கிலாந்தின் எஃப் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டும் மான்செஸ்டர் சிட்டியும் மோதவிருக்கின்றன. 

போட்டியின் வரலாற்றில் இறுதியாட்டத்தில் இவ்விரு குழுக்களும் மோதுவது இதுவே முதல்முறை.

பிரைட்டனும் யுனைடெட்டும் மோதிய அரையிறுதியாட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

பெனால்டிகளைக் கொண்டு வெற்றியாளர் முடிவுசெய்யப்பட்டது.

பெனால்டிகளில் 7-6 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது யுனைடெட்.

முன்னதாக நடைபெற்ற மற்றோர் அரையிறுதியாட்டத்தில் ஷெஃபீல்ட் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது சிட்டி.

இங்கிலாந்து காற்பந்து வரலாற்றில் இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் ஆகிய மூன்றையும் ஒரு பருவத்தில் வென்ற ஒரே குழு என்ற பெருமை யுனைடெட்டுக்கு உள்ளது.

இந்தப் பருவத்தில் அந்தச் சாதனையை ஈடுகட்டும் வாய்ப்பு அபாரமாக விளையாடிவரும் சிட்டிக்கு உள்ளது.

எஃப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் கூடுமானவரை அதைத் தடுக்கத் தனது குழு பாடுபடும் என்றார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!