சரியான நேரத்தில் சரியாக விழுந்த கோல்

மட்­ரிட்: மான்­செஸ்­டர் சிட்­டிக்­கும் ரியால் மட்­ரிட் அணிக்­கும் இடை­யிலான சாம்­பி­யன்ஸ் லீக் காற்பந்து அரை இறுதி ஆட்­டம் வெற்றி தோல்வி இன்றி சம­நி­லை­யில் முடிந்தது. முதல் பாதி ஆட்­டத்­தில் 36வது நிமி­டத்­தில் வினிசியஸ் ஜூனி­யர் கோல் போட்டு ரியால் மட்­ரிட்டை முன்­னேற்­றி­னார்.

அதே­நே­ரம் அந்த அணி வீரர்­கள் தற்­காப்­பைத் தீவி­ர­மா­கத் தொடர்ந்­த­னர். சிட்­டி­யின் கோல் போடும் முயற்­சி­க­ளைத் தடுப்­ப­தி­லேயே அவர்­கள் குறி­யாக இருந்­தார்­கள்.

அந்த வகை­யில் சிட்­டி­யின் கோல் மன்­னன் என்று புக­ழப்­படும் எர்­லிங் ஹாலண்ட் அரு­மை­யா­கக் கொண்டு சென்ற பந்தை கோலாக மாற்ற முயன்­ற­போது ரியால் வீரர்­கள் விவே­கத்­து­டன் செயல்­பட்டு அத­னைத் தடுத்­த­னர்.

இருப்­பி­னும், எதி­ர­ணியை முன்­னே­ற­வி­டக் கூடாது என்­னும் அவர்­களின் நினைவு கன­வா­கிப்­போ­னது.

இடை­வே­ளைக்­குப் பின்­னர் 67 வது நிமி­டத்­தில் சிட்­டி­யின் மத்­திய திடல் ஆட்­டக்­கா­ரர் கெவின் டி பிரய்ன கோல் அடித்து சமப்­ப­டுத்­தி­னார்.

“சரி­யான நேரத்­தில் போடப்­பட்ட கோல் அது,” என்று சிட்டி நிர்­வாகி கார்­டி­யாலோ புகழ்ந்­தார்.

மேலும் அவர் கூறு­கை­யில், “எதி­ர­ணி­யின் தவ­று­கள் எங்­க­ளுக்­குத் தெரி­யும். அதனை அவர்­கள் இனி­மேல் சரி­செய்­ய­லாம். அப்­ப­டியே தொடர்ந்­தா­லும் தொட­ர­லாம். இருப்­பி­னும் எங்­கள் தரப்­பில் இன்­னும் சிறப்­பான தற்­காப்பு ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த சில மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்டி இருக்­கும்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!