வாள் வீச்சில் சிங்கப்பூருக்கு ஏழு தங்கம்

நோம்­பென்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் பெண்­கள் ‘எப்பி’ பிரிவு வாள் வீச்­சில் சிங்­கப்­பூர் வீராங்­க­னை­கள் தங்­கம் வென்­றுள்­ள­னர். எல்லி கோ, கிரியா டிக்­கானா, ஃபில்ஸா ஹிடாயா, ரெபெக்கா ஓங் ஆகி­யோ­ரைக் கொண்ட சிங்கப்­பூர்க் குழு இறு­திச் சுற்­றில் 45-37 எனும் ஆட்­டக்­க­ணக்­கில் பிலிப்­பீன்சை வென்றது.

சென்ற வாரம் நடை­பெற்ற ஆறு தனி­ந­பர் வாள் வீச்­சுப் போட்­டி­களில் சிங்­கப்­பூர் ஐந்து தங்­கப் பதக்­கங்­களைக் குவித்­தது.

ஆண்­கள் ‘சேபர்’ பிரி­வில் மட்­டும் சிங்­கப்­பூ­ருக்­குத் தங்­கம் கிடைக்­க­வில்லை.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற பெண்­கள் ‘ஃபாய்ல்’ பிரி­வி­லும் சிங்­கப்­பூர் வாகை சூடி­யது. ஆண்­கள் ‘ஃபாய்ல்’ பிரி­வின் இறு­தி­யாட்­டத்­தில் வெள்­ளிப் பதக்­கம் வென்­றது.

வாள் வீச்சுப் போட்டிகளில் மொத்­தம் ஏழு தங்­கப் பதக்­கங்­க­ளைப் பெற்றுள்ளது சிங்­கப்­பூர்.

பெண்­கள் தரைப்­பந்­தில் சிங்கப்பூர் தங்­கத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளது. தாய்­லாந்­துக்கு எதி­ரான இறு­தி­யாட்டத்­தில் சிங்­கப்­பூர் 4-2 எனும் கோல் கணக்­கில் வெற்­றி­கண்­டது.

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக பெண்­கள் தரைப்­பந்­தில் தங்­கம் வென்­றது சிங்­கப்­பூர். 2015, 2019ஆம் ஆண்­டு விளையாட்டுகளிலும் அணி வாகை சூடி­யது.

2017, 2021 விளை­யாட்­டு­களில் தரைப்­பந்­துப் போட்டிகள் இடம்­பெ­ற­வில்லை.

இவ்­வாண்டு விளை­யாட்­டு­க­ளின் ஆண்­கள் தரைப்­பந்­துப் போட்­டி­யில் மலே­சி­யாவை வென்று, சிங்கப்பூர் வெண்­க­லப் பதக்­கம் வென்­றது.

பெண்­கள் ஒற்­றை­யர் மேசைப்­பந்­துப் போட்­டி­யில் முதல்­மு­றை­யாக தங்­கம் வென்­றிருக்கிறார் சிங்­கப்­பூரின் ஸெங் ஜியான். இதற்கு முன்பு தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களின் இப்­போட்­டி­யில் நான்கு முறை இறு­தி­யாட்­டத்­திற்­குச் சென்று தோல்வி­யைத் தழு­விய 26 வயது ஸெங், விடா­மு­யற்­சி­யு­டன் ஆடி வெற்றி­வாகை சூடி­னார்.

இறு­தி­யாட்­டத்­தில் தாய்­லாந்­தின் சுதா­சினி சாவெட்­டா­புட்டை 4-3 (11-8, 11-8, 11-9, 3-11, 9-11, 7-11, 11-9) எனும் ஆட்­டக்­க­ணக்­கில் இவர் வெற்றி­கண்­டார்.

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் ஆண்­கள் ஒற்­ற­யைர் மேசைப்­பந்தி­லும் முதல்­மு­றை­யா­கத் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார் மற்­றொரு சிங்­கப்­பூ­ர­ரான ஐஸெக் குவெக். இறு­தி­யாட்­டத்­தில் வியட்­னா­மின் கையன் அன் துவை 4-0 (11-3, 11-6, 11-8, 11-7) எனும் ஆட்­டக்­க­ணக்­கில் வென்­றார் 16 வயது ஐஸெக் குவெக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!