மிரளவைக்க செல்சி, லிவர்பூல் திட்டம்

லண்டன்: புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் தங்களின் முதல் ஆட்டத்திலிலேயே ஒன்றுடன் ஒன்று சந்திக்கவுள்ளன பிரபல குழுக்களான செல்சி, லிவர்பூல். இவ்விரு குழுக்களும் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு மோதுகின்றன.

சென்ற பருவத்தில் செல்சி, லிவர்பூல் இரண்டும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை. அதிலும் செல்சி என்றும் இல்லாத வகையில் படுமோசமாக விளையாடியது.

சென்ற பருவம் லீக் பட்டியலில் செல்சி 12வது இடத்தில் முடித்தது. பட்டியலில் ஐந்தாவது இடத்தில் முடித்த லிவர்பூல், இப்பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது. பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் குழுக்கள்தான் அப்போட்டிக்கு முன்னேறும்.

இப்பருவம் இவ்விரு குழுக்களுக்கும் ஒரே இலக்குதான்; மீண்டும் எதிரணிகளை மிரளச் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதே ஆகும். புதிய நிர்வாகி மொரிச்சியோ பொக்கட்டினோவின்கீழ் மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது செல்சி.

“போட்டியிட்டு வெற்றுபெறுவதற்கான முயற்சியில் இறங்குவதே விளையாட்டாளர்களின் மனப்போக்காக இருக்கிறது. வேறு எந்த அணுகுமுறையையும் நான் ஏற்கமாட்டேன். இக்குழுவை இருக்கவேண்டிய இடத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றார் இதற்கு முன்பு பிரான்சின் பிஎஸ்ஜி குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்த பொக்கட்டினோ.

சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பிரிமியர் லீக் குழுவான டொட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் நிர்வாகியாக இருந்த பொக்கட்டினோ, அக்குழுவை நன்கு மேம்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஒரே நட்சத்திர விளையாட்டாளர்களைச் சார்ந்திருந்ததால் சென்ற பருவம் அதிகம் சோபிக்கமுடியாமல் போனது என்ற குற்றச்சாட்டு லிவர்பூலுக்கு இருந்தது. அந்நிலைமை இப்போது மாறியுள்ளது.

முக்கிய இடங்களில் சில புதிய விளையாட்டாளர்களை வாங்கியிருக்கிறார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப். அதே வேளையில் ராபர்ட்டோ ஃபர்மினோ போன்ற பழைய வீரர்கள் சிலர் குழுவிலிருந்து வெளியேறிவிட்டனர்.

“மாறுபட்ட லிவர்பூலுக்கு இது ஒரு புதிய தொடக்கம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார் கிளாப்.

செல்சி, லிவர்பூல் இரண்டும் பிரைட்டனின் மொய்சஸ் கைசேடோ எனும் நடுத்திடல் வீரரை வாங்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கின. இனி களத்தில் மீண்டும் தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் இலக்குடன் இரு குழுக்களும் இருக்கின்றன.

இன்றைய மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் டொட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் பிரெண்ட்ஃபர்டும் சந்திக்கின்றன. கடந்த இரு பருவங்களில் எதிர்பார்ப்புகளை மிஞ்சி பல தரப்பினரின் பாராட்டை வென்ற பிரெண்ட்ஃபர்ட் தொடர்ந்து வளர்ச்சியடையத் துடிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!