நேரத்தை வீணடிக்காத ஹாலண்ட்

மான்செஸ்டர்: புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் தொடங்கி நான்கே நிமிடங்களில் தனது ஆற்றலை மீண்டும் நினைவூட்டினார் மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட். பர்ன்லிக்கும் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான சிட்டிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் நான்காவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார் ஹாலண்ட்.

அதற்குப் பிறகு 36வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் போட்டு அசத்தினார். பர்ன்லியை 3-0 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது. புதிய பிரிமியர் லீக் பருவத்தின் முதல் ஆட்டமான இதில் சிட்டியின் மூன்றாவது கோலைப் போட்டவர் ரொட்ரி.

சென்ற பருவத்தில் பிரிமியர் லீக்கில் மட்டும் 36 கோல்களை விளாசினார் ஹாலண்ட். இதற்கு முன்பு எந்த விளையாட்டாளரும் ஒரே லீக் பருவத்தில் இத்தனை கோல்களைப் போட்டதில்லை.

சென்ற பருவம் எல்லா போட்டிகளிலும் மொத்தமாக 52 கோல்களைப் போட்டார் 23 வயது நார்வீஜிய வீரரான ஹாலண்ட். பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்று கிண்ணங்களையும் வென்றது சிட்டி.

இங்கிலாந்தில் முன்னதாக சிட்டியின் பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட் மட்டும்தான் ஒரே பருவத்தில் இந்த மூன்று கிண்ணங்களையும் வென்றிருந்தது.

இங்கிலாந்து காற்பந்துக் கட்டமைப்பில் இரண்டாவது நிலையில் இருக்கும் சாம்பியன்ஷிப் எனும் லீக்கிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறியிருக்கிறது பர்ன்லி. முன்னாள் சிட்டி வீரர் வின்சென்ட் கொம்பனி இக்குழுவின் நிர்வாகி.

பெரும் நம்பிக்கையுடன் மீண்டும் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் பர்ன்லியால் சிட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

ஆட்டத்தில் சிட்டி நட்சத்திரம் கெவின் டி பிரோய்ன் காயமுற்றார். அதைத் தொடர்ந்து அவரால் சில வாரங்களுக்கு விளையாட முடியாது என்பதை சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!