வெஸ்ட் ஹேமுக்கு இன்ப அதிர்ச்சி

பிரைட்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் எதிர்பாரா விதமாக பிரைட்டனை வென்றுள்ளது வெஸ்ட் ஹேம் யுனைடெட். 3-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் வெற்றி பெற்றது.

சென்ற பருவத்தில் சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி இப்பருவத்தை அபாரமாகத் தொடங்கியிருந்தது பிரைட்டன். அப்படிப்பட்ட குழுவுக்கு எதிராக வெஸ்ட் ஹேம் தடுமாறக்கூடும் என்று கருதப்பட்டது.

அதற்கு மாறாக மிகச் சிறப்பாக விளையாடி பிரைட்டனைத் திக்குமுக்காடச் செய்தது வெஸ்ட் ஹேம்.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேமை முன்னுக்கு அனுப்பினார் ஜேம்ஸ் வார்ட் பிரவுஸ். 58வது நிமிடத்தில் ஜேரட் போவன் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். 63வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேமின் மூன்றாவது கோலைப் போட்டார் மிக்காய்ல் என்டோனியோ. 81வது நிமிடத்தில் பாஸ்கல் கிரோஸ் பிரைட்டனுக்கு ஆறுதல் கோலைப் போட்டார்.

சென்ற வாரம் செல்சியை வென்று அசத்திய வெஸ்ட் ஹேம் தனது ரசிகர்களுக்குத் தொடர்ந்து இன்ப அதிர்ச்சியை அளித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!