செல்சிக்கு ஆட்டம் காண்பித்த வெஸ்ட் ஹேம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட செல்சியைத் திக்குமுக்காடச் செய்துள்ளது வெஸ்ட் ஹேம் யுனைடெட். 3-1 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் வென்றது.

கோல் எண்ணிக்கை 2-1 என இருந்தபோது தப்பாட்டம் காரணமாக வெஸ்ட் ஹேமின் நாயெஃப் அகுவெர்ட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். அதற்குப் பிறகும் விட்டுக்கொடுக்காமல் மனவுறுதியுடன் விளையாடி அக்குழு வென்றது.

ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் அகுவெர்ட், வெஸ்ட் ஹேமை முன்னுக்கு அனுப்பினார். 28வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் செல்சியின் கார்னி சுக்வுவெமெக்கா.

53வது நிமிடத்தில் மிக்காய்ல் அன்டோனியோ மீண்டும் வெஸ்ட் ஹேமை முன்னுக்கு அனுப்பினார். 95வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி வெஸ்ட் ஹேமின் வெற்றியை உறுதிப்படுத்தினார் லூக்கஸ் பக்கெட்டா.

முன்னதாக செல்சியின் பெனால்டி வாய்ப்பைத் தடுத்தார் வெஸ்ட் ஹேம் கோல் காப்பாளர் அல்ஃபோன்ஸ் அரியோலா.

சென்ற பருவம் படுமோசமாகச் செய்த செல்சி இம்முறையும் தடுமாறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இப்பருவத்தில் சிறப்பாகச் செய்ய உடனடியாக மேம்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது செல்சி.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் எவர்ட்டனை 4-0 எனும் கோல் கணக்கில் வென்று அசத்தியது ஆஸ்டன் வில்லா. இந்த லீக் பருவத்தில் நியூகாசல் யுனைடெட்டிடம் படுதோல்வி கண்ட வில்லா இரண்டாவது ஆட்டத்தில் நன்கு மீண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!