சரிவிலிருந்து மீண்டெழுந்த யுனைடெட்

மான்செஸ்டர்: நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் பின்னால் சென்றது மான்செஸ்டர் யுனைடெட். ஆனால் அபாரமாக மீண்டுவந்து 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது.

டைவோ அவொனியி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலும் விலி பொலி நான்காவது நிமிடத்திலும் ஃபாரஸ்ட்டின் கோல்களைப் போட்டனர். 17வது நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்சன் யுனைடெட்டின் முதல் கோலைப் போட்டார்.

52வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் கசமியரோ. பின்னர் 76வது நிமிடத்தில் அணித் தலைவர் புரூனோ ஃபெர்னாண்டஸ் யுனைடெட்டின் வெற்றி கோலைப் போட்டார்.

அதிர்ச்சியிலிருந்து சிறப்பாக மீண்டு வந்தபோதும் யுனைடெட்டின் ஆற்றல் குறித்த ஐயங்கள் தொடர்கின்றன. 67வது நிமிடத்தில் தப்பாட்டம் காரணமாக ஃபாரஸ்ட் விளையாட்டாளர் ஜோ வோரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். அதற்குப் பிறகும் யுனைடெட் சற்று சிரமப்பட்டது.

மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் எதிர்பாரா விதமாக ஃபுல்ஹமை வெல்லத் தவறியது ஆர்சனல். அந்த ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே ஃபுல்ஹம் முன்னுக்குச் சென்றது. 70வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய ஆர்சனல், இரண்டே நிமிடங்களில் முன்னுக்குச் சென்றது.

தப்பாட்டம் காரணமாக 83வது நிமிடத்தில் ஃபுல்ஹமின் கேல்வின் பெசி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார். அதையும் எதிர்கொண்டு 87வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் ஃபுல்ஹமின் பலின்ஹா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!