விளையாட்டுத் துளிகள்

பங்ளாதேஷுக்குப் பின்னடைவு

டாக்கா: தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளதால் ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்ளாதேஷ் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நேப்பாளம், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டிகள் நேற்று தொடங்கின. பாகிஸ்தானிலும் இலங்கையிலும் இப்போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், இவ்வாண்டில் பங்ளாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்த பந்தடிப்பாளரும் விக்கெட் காப்பாளருமான லிட்டன் தாஸ் காய்ச்சலிலிருந்து இன்னும் தேறவில்லை. இதனையடுத்து, அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரும் பந்தடிப்பாளருமான அனாமுல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று மாலை இரவுபகலாக நடக்கும் ஆட்டத்தில் இலங்கையுடன் பங்ளாதேஷ் பொருதவுள்ளது.

ஃபுல்ஹமிடம் வீழ்ந்த ஸ்பர்ஸ்

லண்டன்: லீக் கிண்ணக் காற்பந்தின் இரண்டாம் சுற்றில் ஃபுல்ஹம்  குழுவிடம் பெனால்டி வாய்ப்புகளில் 5-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு. முன்னதாக, ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது. கடைசியாக 2008ஆம் ஆண்டில் ஸ்பர்ஸ் குழு லீக் கிண்ணத்தை வென்றிருந்தது. அதன்பிறகு அக்குழு எந்த ஒரு கிண்ணத்தையும் வென்றதில்லை. மற்ற ஆட்டங்களில் லூட்டன் டவுன் 3-2 என்ற கோல் கணக்கில் கெனில்வொர்த் ரோடு குழுவையும், போர்ன்மத் குழு அதே கோல் வித்தியாசத்தில் சுவான்சி குழுவையும், கிரிஸ்டல் பேலஸ் குழு 4-2 என்ற கோல் கணக்கில் பிளைமவுத் குழுவையும் வீழ்த்தின.

அடுத்த சுற்றில் அல்கராஸ்

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் தொடரில், நடப்பு வெற்றியாளரான ஸ்பானிய ஆட்டக்காரர் கார்லோஸ் அல்கராஸ் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். முதல் சுற்றில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெர்மனியின் டோமினிக் கப்ஃபா 6-2, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், கணுக்கால் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகினார். இரண்டாம் சுற்றில் தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிசை எதிர்த்து விளையாடவுள்ளார் அல்கராஸ். இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் இருமுறை வெற்றியாளரான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனின் கிரீட் மினனிடமிம் தோற்று, முதல் சுற்றுடன் வெளியேறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!