பாயர் லிவர்குசன் நிர்வாகியாக தொடருவேன்: சாபி அலோன்சோ

மியூனிக்: காற்பந்தில் விளையாட்டு வீரராக முத்திரைப் பதித்த ஸ்பெயினின் சாபி அலோன்சோ, தற்போது நிர்வாகியாகவும் சாதித்து வருகிறார்.

ஜெர்மனிய காற்பந்து அணியான பாயர் லிவர்குசன் குழுவுக்கு நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார் அலோன்சோ.

அவரது நிர்வாகத்தின் கீழ் அந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது புள்ளிப் பட்டியலில் அது முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரபல காற்பந்துக்குழுக்களான லிவர்பூல், பயர்ன் மியூனிக் ஆகியவை அலோன்சோவை தங்களது நிர்வாகியாக மாற்றத் திட்டமிட்டுவருகின்றன.

“ விடுமுறை நேரத்தில் எனது எதிர்காலம் குறித்து சிந்தித்துப் பார்த்தேன். இளம் நிர்வாகியான எனக்கு பாயர் லிவர்குசன் சிறந்த இடமாக இருக்கும், அதனால் அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக தொடர்வேன்” என்று அலோன்சோ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாயர் லிவர்குசன் அணிக்கு 2026ஆம் ஆண்டு வரை நிர்வாகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அலோன்சோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!