இபிஎல் காற்பந்து: சிட்டியை எதிர்கொள்ளும் ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வர கடுமையான போட்டி நிலவுகிறது.

ஆர்சனல், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் இந்த பருவத்தின் வெற்றியாளராக மகுடம் சூட விட்டுக்கொடுக்காமல் விளையாடிவருகின்றன.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி பட்டியலில் ஆர்சனல் குழு 64 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 64 புள்ளிகளுடன் லிவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 63 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்சனல் குழுவை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி விளையாடவுள்ளது.

இந்த ஆட்டத்தின் வெற்றியாளருக்கு கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு நடக்கவுள்ளது.

ஆர்சனல் அணி தான் விளையாடிய கடைசி ஐந்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று உற்சாகத்தில் உள்ளது. இருப்பினும் இந்த ஆட்டம் சிட்டியின் சொந்த மண்ணில் நடப்பதால் ஆர்சனலுக்கு அது நெருக்கடியைத் தரலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் சிட்டியை அதன் சொந்த மண்ணில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஆர்சனல் வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி தான் விளையாடிய கடைசி ஐந்து ஆட்டங்களில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றது. கடைசியாக லிவர்பூலுடன் விளையாடிய ஆட்டத்தை 1-1 என்று சமம் செய்தது சிட்டி.

எப்போதும் போல் ஆர்சனல் அணிக்கு எதிராகவும் சிட்டி அதிரடியாக விளையாடக்கூடும், அதனால் ஆர்சனல் தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியை பிரைட்டன் அணி எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி 9 மணிக்கு நடக்கிறது.

அண்மையில் நடந்த எஃப்ஏ கிண்ண காலிறுதி ஆட்டத்தில் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதனால் இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அதிக கோல்கள் அடித்து எளிதாக வெற்றிபெற முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிவர்பூல் பயிற்றுவிப்பாளர் யர்கன் கிளோப் இந்த பருவத்துடன் அந்த அணியைவிட்டு விலகுவதால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்ல அவர் கடுமையாகப் போட்டிக்கொடுக்கக்கூடும். 

புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் பிரைட்டன் முன்னணி அணிகளுடன் விளையாடும் போது தடுமாறுகிறது. இருப்பினும் இதற்குமுன்னர் லிவர்பூல் அணியுடன் விளையாடிய ஆட்டங்களில் பிரைட்டன் சிறப்பாக விளையாடியுள்ளது. அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!