உல‌க‌ம்

பிரிட்டிஷ் கொலம்பியா: அனைத்துலக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விழையும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநில அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.
சியாங்மாய்: தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் கரடியிடமிருந்து தப்பிக்க, சுவிஸ் ஆடவர் ஒருவர் தமது கையையே வெட்டிக்கொண்டார்.
சிட்னி: சிட்னி துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். இதில் அப்பெண்ணின் வலது காலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.
சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.
துபாய்: இஸ்ரேலிய உளவுத்துறை நடவடிக்கையுடன் தொடர்புடைய நான்கு பேரின் மரண தண்டனையை ஈரான் திங்கட்கிழமை நிறைவேற்றியது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.