You are here

உல‌க‌ம்

பாம்புகளுடன் விடப்பட்ட பள்ளிக் குழந்தைகள்

கோலா கங்சார்: குழு மேம்பாட்டுப் பயிற்சி என்று கூறி, 10 முதல் 12 வயதிற்குட்பட்ட பள்ளிச் சிறாரை பாம்புகள் இருக்கும் சேற்றுக் குளத்தில் இறங்கச் செய்த விவகாரத்தில் பயிற்றுவிப்பாளர்கள், உதவியாளர்கள் என பத்துப் பேரை பேராக் குடிமைத் தற்காப்புப் படை இடைநீக்கம் செய்துள்ளது. கோலா கங்சாரில் உள்ள குடிமைத் தற்காப்புப் படை தலைமையகத்தில் பெலுரு தேசிய பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டது.

பத்து மலை ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள்: நகராட்சி மன்றம் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா: தைப்பூசத் திருநாளுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் மலேசியா வின் புகழ்பெற்ற பத்து மலை ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுப்பிப்புப் பணிகள் தொடர்பில் எந்த அனு மதியும் பெறவில்லை எனக் கூறி, செலாயாங் நகராட்சி மன்றம் பத்து மலை ஆலய நிர்வாகத்திற்கு எச்ச ரிக்கைக் கடிதம் அனுப்பியிருக் கிறது. அதற்கு ஆலய நிர்வாகம் இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியா: வழிப்பறி 36% அதிகரிப்பு

ஜோகூர் பாரு: மலேசியாவில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய குற்றக் குறியீட்டெண் 0.8% குறைந்து இருப்பதாக துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி தெரிவித்து இருக்கிறார். இந்தக் கால கட்டத்தில் அங்கு 85,049 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், வழிப்பறித் திருட்டுச் சம்பவங்கள் மட்டும் 36.18% கூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மோசுல் நகரில் தொடர்ந்து போராளிகளுடன் ச ண்டை

படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கிய ராணுவம் நேற்று இரண் டாவது நாளாக கடும் தாக்குதலில் ஈடுபட்டது. ஈராக்கியப் படை மோசுல் நகருக்குள் முன்னேறிச் சென்ற போதிலும் போராளிகளிடமிருந்து அந்நகரை ஈராக்கியப் படையினர் கைப்பற்று வதற்குச் சில காலம் பிடிக்கலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் பீட்டர் குக் கூறினார்.

தாய். ராணுவம்: ஜனநாயக ஆட்சிக்குத் திரும்பும் திட்டத்தில் மாற்றம் இல்லை

படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவு, ஜனநாயக ஆட்சி முறைக்குத் திரும்பும் திட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தாய்லாந்து ராணுவம் உறுதி அளித்துள்ளது. மன்னரின் மறைவுக்குப் பிறகு அவரது பொறுப்பை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள வேளையில் ராணுவ ஆட்சி தொடரக்கூடும் என்று மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா தெரி வித்துள்ளார்.

மெலானியா: என் கணவர் டிரம்ப் மீது பெண்கள் கூறும் புகார்கள் பொய்யானவை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட் பாளர் டோனல்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், தன் கணவர் மீது சில பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகள் பொய் யானவை என்று தெரிவித்துள் ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் தன் கணவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய புகார்கள் கூறப்படுவதாகக் கூறிய மெலானியா, பெண்கள் பற்றி இழிவான கருத்துகளை டிரம்ப் கூறியதாக வெளியான வீடியோ செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னார். “டிரம்ப் மீது பெண்கள் கூறிய பாலியல் புகார்கள் பொய்யானவை. ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையானவர்.

தேர்தல் திட்டம் பாதிக்கப்படாது

படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவால் அந்நாட்டு மக்கள் துயரத் தில் மூழ்கியுள்ள வேளையில் அரசாங்கப் பணிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் தேர்தல் திட்டத்தில் மாற்றம் இருக்காது என்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். திட்டமிட்டபடி தேர்தல் 2017ஆம் ஆண்டு நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித் துள்ளது. அதே போல திட்டமிட்ட படி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக் படை தாக்குதல்

மோசுல் நகரில் ஐஸ் போராளி ஒருவர் துப்பாக்கியுடன் காவலில் இருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற கூட்டணிப் படையின் ஆதரவுடன் ஈராக் அரசாங்கப் படை கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அந்நகரைச் சுற்றி வளைத்துள்ள ஈராக்கியப் படையினர் பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ராணுவ கவச வாகனங்கள் அந்நகரை நோக்கிச் செல்லும் வேளையில் இந்த முறை தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல் அபாடி கூறியுள்ளார்.

இரு வீரர்களுடன் விண்ணுக்குப் புறப்பட்டது சீனாவின் விண்கலம்

சீன விண்வெளி வீரர்கள்  49 வயது ஜிங் ஹாய்பிங் மற்றும் 37 வயது சென் டாங். படம்: சின்ஹுவா

பெய்ஜிங்: சீனா, இரண்டு விண்வெளி வீரர்களுடன் ’ஷெங்ஸே„வ் 11’ என்ற விண்கலத்தை நேற்று காலை விண்ணில் செலுத்தியது. சீனாவின் விண்வெளி வீரர்களான 49 வயது ஜிங் ஹாய்பிங் மற்றும் 37 வயது சென் டாங் ஆகியோர் இந்த விண்கலத்தில் சென்றுள்ளனர். ’ஷெங்ஸே„வ் 11’ விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டு விஞ்ஞானிகளும் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மியன்மார் ஆற்றில் படகு மூழ்கியதில் 14 பேர் பலி, பலரைக் காணவில்லை

மியன்மார் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புப்பணியாளர்கள். படம்: ஏஎப்பி

யங்கூன்: மியன்மார் ஆற்றில் ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மியன்மாரின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ட்வின் ஆற்றில் சனிக்கிழமை பயணிகள் படகு ஒன்று பாரம் தாங்காமல் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தைத் தொடர்ந்து சுமார் 150 பேர் காப்பாற்றப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மியன்மாரில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிகளைக் கடந்துசெல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

Pages