You are here

உல‌க‌ம்

ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்திலுள்ள விமான நிலையத்தைக் குறிவைத்து ஏமனிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையை சவூதி விமானப் படையினர் இடைமறித்து அழித்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே அந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதால் உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டதாக சவூதி அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்தது.

ஜப்பானில் அதிபர் டிரம்ப்

படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது 12 நாள் ஆசியப் பயணத்தை இன்று தொடங்குகிறார். பயணத்தின் முதல் கட்டமாக அவர் இன்று காலை ஜப்பான் தலைநகர் தோக்கியோ சென்றுள்ளார். ஜப்பானுடன் இணைந்து வட கொரியப் பிரச்சினைக்கு ஒருமித்த கூட்டணியை அமைப்பதை டிரம்ப் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணை சோதனைகளால் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள ஆசியாவில் கூட்டணி நாடுகளின் ஆதரவை நாடுவதில் அதிபர் டிரம்ப் முக்கியமாக கவனம் செலுத்துவார்.

அமைதியை ஊக்குவிக்கவேண்டும்: ராணுவ படையினருக்கு ஸி ஜின்பிங் வேண்டுகோள்

படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் அமைந்துள்ள சீனா வின் முதல் வெளிநாட்டு ராணு வத் தளம் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஊக்கு விக்கவேண்டும் என்று அங்கு உள்ள ராணுவப் படையினருக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் வீடியோ உரை மூலம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ராணுவத்தின் 90வது ஆண்டு நிறைவையொட்டி அந்த வெளி நாட்டுத்தளம் திறக்கப்பட்டது. இதுவரை அதிகாரபூர்வமாக அந்தத் தளத்தை தளவாடத் தளமாகத்தான் சீனா விவரித்து வருகிறது.

வாட்ஸ்அப், டெலிகிராம் சேவைகளை முடக்கிய ஆப்கான்

காபூல்: வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய குறுஞ்செய்தி சேவைகளை முடக்கும்படி இணையச் சேவை வழங்குபவர்களிடம் ஆப்கானிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகள் இந்தச் சேவைகள் மூலம் குறிமுறையாக்கப்பட்ட செய்திகளை அனுப்பிவருவதால் பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு இந்த ஆணையைப் பிறப்பித்திருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆணையின்படி அந்தக் குறுஞ்செய்தி நிறுவனங்கள் சேவையை ரத்து செய்துவிட்டனவா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

ஊட்டச்சத்து பிரச்சினையால் பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான மக்கள்

லண்டன்: இன்றைய உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் ஊட்டச்சத்து பிரச்சினை உள்ளது. அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் உடல் பருமன் அதிகரிப்பது அல்லது ஊட்டச் சத்து குறைவால் உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக நேற்று வெளியான முக்கிய ஆய்வு ஒன்று கூறுகிறது. சுமார் 140 நாடுகளில் மேற் கொண்ட ஆய்வுகளில் இந்த உண்மை தெரியவந்ததாக உலக ளாவிய ஊட்டச்சத்து அறிக்கையை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறி னர்.

கேட்டலோனியா தலைவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது ஸ்பெயின்

மாட்ரிட்: பதவியிலிருந்து நீக்கப் பட்ட கேட்டலோனியா தலைவர் பியூக்டிமோண்டையும் அவரது நண்பர்கள் நால்வரையும் கைது செய்ய ஸ்பெயினில் நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த ஐந்து பேரும் மாட்ரிட் நகர உச்சநீதிமன்ற விசார ணைக்கு வரத் தவறியதையடுத்து அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட்டார அரசாங்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்க ளான இதர ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜப்பான் $67.9 மி. நிதியுதவி

தோக்கியோ: பெண் தொழில் முனைவர்களை ஊக்குவிக்கும் உலக வங்கியின் முயற்சிக்கு ஜப்பான் $67.9 மில்லியன் நிதி அளிக்கும் என்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜப்பானில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பெண்கள் உலக சபைக் கருத்தரங்கில் அந்த அறி விப்பை அவர் வெளியிட்டார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும் அவரது மகளுமான இவான்கா டிரம்ப் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து கடன் வழங்கும் உலக வங்கியின் பெண் தொழில் முனைவர் நிதித் திட்டத் திற்கு ஆக அதிகளவில் நிதி வழங்கிய நாடாக ஜப்பான் திகழும்.

தடுப்பு முகாமிலிருந்து 150 அகதிகளை ஏற்றுக்கொள்ள முன்வந்த நியூசிலாந்து

வெலிங்டன்: பாப்புவா நியூகினியில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் மூடப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேற மறுக்கும் 600 அகதிகளில் 150 பேரை நியூசிலாந்து ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை நாளை சந்திக்கவிருக்கும் ஆர்டன், இது குறித்து பேசவிருப்பதாக மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார். அகதிகளை ஏற்றுக்கொள்வதால் ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பிரச்சினையிலிருந்து சற்று விடிவு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

ராக்கைன் மாநிலத்திற்கு ஆங் சான் சூச்சி வருகை

 படம்: ஏஎஃப்பி

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் கலவரம் மூண்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் முதன் முறையாக மியன்மார் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி அம்மையார் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள பல நகரங்களுக்குச் சென்றிருந்த திருவாட்டி சூச்சி, அங்கு வசிக்கும் சிறுபான்மை இனத் தைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம் என்று அங்குள்ள மக்களை அவர் கேட்டுக்கொண்டார். அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அரசாங் கத்தின் உதவித் திட்டங்களைப் பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக தகவல்கள் கூறின.

நியூயார்க்கில் நடையர்கள் மீது லாரியை மோதி 8 பேரைக் கொன்ற 29 வயது இளைஞர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது லாரியை மோதி 8 பேரைக் கொன்ற சந்தேக நபர் மீது பயங்கரவாதம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாக அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். நியூயார்க்கில் குறைந்தது 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 29 வயது சைஃபுல்லோ சாய்போவ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பொருட் களையும் வளங்களையும் கொடுத்து ஆதரவு அளித்து வந்த தாகவும் சைஃபுல்லோ சாய்போவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Pages