சிங்க‌ப்பூர்

நிதித் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 58 வயது திருவாட்டி ஓங் சின் ஹோங்குக்கு பணத்தை நிர்வகிப்பதில் பரிட்சயம் உண்டு. இருப்பினும் நூல் இழையில் மோசடியில் சிக்குவதிலிருந்து தப்பித்தார். தம் சக ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து அவனது வர்த்தகத்துக்காக பணம் தேவை என தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.
பலத்த காற்றையும் பூஜ்ஜியத்துக்குக் கீழ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்த்துப் போராடி, பாலர்பள்ளி மாணவர் அபியன் இம்தியாஸ் இர்கிஸ், எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்துள்ள ஆக இளைய சிங்கப்பூரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவர் வேறு மூவருடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு லஞ்சமாக $88,0000க்கும் மேலான தொகையை வழங்கினார்.
ஜப்பானிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தைச் சேர்ந்த ஆலோசகர் ஒருவர், தோக்கியோவில் அமைந்துள்ள பொதுக் குளியல் வளாகத்தில் ஒரு சிறுவனை ரகசியமாகக் காணொளி எடுத்ததை ஒப்புக்கொண்டார்.
ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.