சிங்க‌ப்பூர்

பிடோக் ரெசர்வார் பூங்கா வழியாக பாசிர் ரிஸ் பூங்காவுக்கும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கும் இடையே பொதுமக்கள் மிதிவண்டியில் செல்லவும் மெதுவோட்டத்தில் ஈடுபடவும் மாற்றுப் பாதை திறக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற உடனடிச் சவால்களுக்கும் வலுவான பொருளியல் வளர்ச்சி, சிறந்த வேலைவாய்ப்பு போன்ற நீண்டகால இலக்குகளுக்கும் தீர்வுகாணும் நோக்குடன் வரவுசெலவுத் திட்ட அறிக்கை 2024 அமைந்துள்ளது.
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளுக்கு நன்கொடை வழங்கும் சிங்கப்பூரர்கள் 100 விழுக்காடு வரிக்கழிவுக்கு கோரிக்கை விடுக்க முடியும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைக்கும் வகையில், சிங்கப்பூர்வாசிகள் கடந்த ஆண்டு ஈட்டிய வருமானத்திற்கு 50 விழுக்காடு தனிநபர் வருமான வரிக் கழிவைப் பெறுவார்கள் என வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு விரைவில் அதிகமான வேலைநலன் வழங்கீடுகள் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.