சிங்க‌ப்பூர்

‘மாஜுலா தொகுப்பு’ மூலம் ஐம்பது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய 1.6 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடையவிருக்கின்றனர். இது, அவர்களுடைய ஓய்வு கால தொகையை மேம்படுத்த உதவுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில் ‘ஏஜ்வெல் எஸ்ஜி’ எனும் துடிப்பான முதுமைக்காலத் திட்ட நடவடிக்கைகளுக்காக $3.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும். நாள்தோறும் பொதுவாக கூட்டம் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கும் என்றும் உறுதியான நேரத்தை நாடாளுமன்றத்தின் இணையத் தளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் நாடாளுமன்ற அலுவலர் பிப்ரவரி 16ம் தேதி தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பட்டயம் பெறும் மாணவர்கள் நிரப்புத் தொகையாக மொத்தம் $15,000 பெறுவர்.
சிங்கப்பூரில் 2,600க்கும் அதிகமான நிறுவனங்கள் தன்னுரிமை பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வருவதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (16 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.