You are here

சிங்க‌ப்பூர்

கெட்டுப்போன உணவு: சிக்கன் ரைஸ் கடைக்கு இடைக்காலத் தடை

சிராங்­கூன் கார்­ட­னில் உள்ள புகழ்­பெற்ற ‘சிக்கன் ரைஸ்’ கடை ஒன்­றுக்கு இடைக்­கா­லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த உண­வுக் கடை­யில் சாப்­பிட்ட 29 பேருக்கு வயிற்­றுக் கோளாறு ஏற்­பட்­டது தெரியவந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்­கப்­பட்­டது. ‘போ சிங் ரெஸ்டா­ரெண்ட்’ உண­வ­கத்­தின் உரி­மத்தை அதி­கா­ரி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள் ளனர். சுகா­தார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற முகவை, வேளாண், உணவு, கால்நடை மருத்­துவ ஆணை­ய­மும் இணைந்து நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டன.

சிங்கப்பூரின் முதல் ஆசிய தலைமை அஞ்சல் அதிகாரியின் சுயசரிதை வெளியீடு

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், திரு பாலசுப்பிரமணியம்.

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரின் முதலாவது ஆசிய தலைமை அஞ்சல் அதிகாரியும் நாட்டின் மூத்த பொதுச் சேவை அதிகாரிகளில் ஒருவருமான திரு எம்.பாலசுப்பிரமணியத்தின் ‘சிங்கப்பூர், எனது நாடு’ எனும் சுயசரிதை நூல் நேற்று வெளி யிடப்பட்டது. முன்னொரு காலத்தில் சிங்கப்பூரின் தலைமை அஞ்சலகமாக விளங்கிய புகழ்பெற்ற ஃபுல்லர்ட் டன் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது சிறப்பம்சம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டு உரையாற்றிய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம், ஒரு ஒட்டு மொத்த தலைமுறையின் பிரதி நிதி திரு பாலசுப்பிரமணியன் என்று புகழ்மாலை சூட்டினார்.

முதலில் சியாங் மாய், பிறகு துபாய் செல்லத் திட்டம்

தாய்லாந்து தேசிய போலிஸ் படையின் துணைத் தலைவர்வுத்தி லிப்டாபலோப்பும் (இடது) தலைவர் ஜக்திப் சைஜிந்தாவும்

ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் தற்போது பேங்காக்கில் போலிஸ் காவலில் இருப்பவர் முதலில் சியாங் மாய்க்கும் பிறகு அங்கிருந்து துபாய்க்கும் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தாய்லாந்து போலிசார் நேற்று தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து கிடைத்த ஒரு குறிப்பேட்டில் தப்பிச் செல்வதற்கான விரிவான திட்டம் குறித்து வைக்கப்பட்டிருந்ததாகப் போலிசார் கூறினர். ஜூலை 7ஆம் தேதி ஹாலந்து வில்லேஜில் இருந்த வங்கியில் கொள்ளையடிப்பதற்கு 26 வயது கனடிய குடிமகன் டேவிட் ஜேம்ஸ் ரோச் ஒரு தாளைப் பயன் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இணைய தீவிரவாதிகளை முன்னரே அறியும் கருவி

வன்முறை தீவிரவாதத்தில் ஈடு படுவோரை முன்கூட்டியே அடை யாளம் கண்டு, இவர்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்துறைக் குழுவின் இயல்புமுறை அறிவியல் நிலையம் புதிய கருவியைத் தயாரித்து வருகிறது. நிலையத்தின் உளவியலாளர் கள் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்துடனும் போர்ட்ஸ்மத் பல்கலைக்கழகக் கல்வியாளர்களுடனும் சேர்ந்து இடர்காப்பு வினாப்படிவத்தைத் தயாரிக்கின்றனர். ‘விரும்பத் தகாத தனிமனிதர்களை’ அடை யாளம் காண குடிநுழைவு அதி காரிகள் பயன்படுத்தும் நேர்கா ணல் நடைமுறையை மேம்படுத்து வது இதன் நோக்கம்.

பூன் லேயில் திடீர் வெள்ளம்

பூன் லே வேய்க்கும் கார்ப்பரேஷன் சாலைக்கும் அருகில் இருக்கும் துணைச் சாலையில் நேற்றுக் காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தத் தகவலை டுவிட்டர் வழியாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுக் காலை 10.16 மணிக்கு தெரிவித்தது. வெள்ளத்தால் போக்குவரத்து தடைப்பட்டதாகவும் கழகம் கூறியது. பின்னர் 10.42 மணிக்கு வெள்ளம் வடிந்து விட்டதாக அறிவித்தது. நிலப்பகுதிகளில் சூரிய வெப்பத்தின் அதிகரிப்பால் ஜுலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பங்ளாதே‌ஷியருக்கு சிறைத் தண்டனை

(இடமிருந்து) ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌலாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29. படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் தடுத்து வைக்கப்பட்ட நான்கு பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டுக்காக 24 மாதம் முதல் 60 மாதம் வரையிலான சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ரஹ்மான் மிஸானுர், 31, மியா ருபேல், 26, முஹம்மது ஜபாத் கைசர் ஹாஜே நூருல் இஸ்லாம் சௌடாகர், 31, சோஹெல் ஹௌ லாடர் இஸ்மாயில் ஹௌலாடர், 29 ஆகியோரே தண்டனை விதிக்கப்பட்ட நால்வர்.

துணி காயப்போடும் கம்பியால் உயிர் பிழைத்த ஆடவர்

துணி காயப்போடும் கம்பியால்  உயிர் பிழைத்த ஆடவர்

11வது மாடி­யில் இருந்து விழுந்த 68 வயது ஆட­வர் ஒரு­வர் துணி காயப்­போ­டும் கம்­பி­யில் சிக்கி உயிர் பிழைத்­தார். அவ­ரது கால் சட்டை 8வது மாடி­யில் இருந்த கம்­பி­யில் மாட்­டிக் கொண்ட­தால் அவர் அந்த­ரத்­தில் தொங்­கினார். டெம்ப­னிஸ் ஸ்ட்­ரீட் 41, புளோக் 410ல் துணி காயப் ­போ­டும் கம்­பி­களில் சிக்­கி­ய­படி ஒரு­வர் அந்த­ரத்­தில் தொங்­கிக் கொண்­டி­ருப்­ப­தாக மாலை 3.30 மணி வாக்­கில் அழைப்பு வந்த­ தாக குடிமைத் தற்­காப்­புப் படை­யின்­ பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­ வித்­தார்.

வங்கிக் கொள்ளை: சந்தேகப் பேர்வழியிடம் $30,000 மீட்பு

வங்கிக் கொள்ளை: சந்தேகப் பேர்வழியிடம் $30,000 மீட்பு

ஸ்டாண்டர்ட் சார்ட்­டர்ட் வங்­கி­யில் கொள்ளையடிக்­கப் பட்­ட­தா­கக் கூறப்­படும் 30,000 வெள்­ளியை­ கைது செய்யப்பட்ட கனடா நாட்டவரிடம் இருந்து தாய்­லாந்து போலி­சார் பத்­தி­ர­மாக மீட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது. பேங்காக்­கில் நேற்று கைது­செய்­யப்­பட்ட ஹாலந்து வில்­லேஜ் கொள்ளைச் சம்பவ சந்­தே­கப் பேர்­வ­ழி­யான டேவிட் ஜேம்ஸ் ரோச் (படம்), பேங்காக்­கில் ஒரு விடு­தி­யில் தங்­கி­யி­ருந்தார். 26 வய­தான அந்த சந்­தே­கப் பேர்­வழி ஒரே பய­ணப் பையு­டன் அந்த விடு­தியை அடைந்தார்.

கட்டாய பொட்டலமிடும் முறை

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி

சிங்கப்பூரில் கழிவுப்பொருள் அளவைக் குறைக்கும் வகையில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாய பொட்டலமிடும் முறையை தேசிய சுற்றுப்புற வாரியம் அறிமுகப்படுத்தவுள் ளது. கழிவுப்பொருட்களின் எடை, அளவு, எப்படிப்பட்ட பொட்டல முறை பயன் படுத்தப்படுகிறது, கழிவுப்பொருள் அளவைக் குறைக்கும் வழிகள் போன்றவை குறித்து நிறுவனங்கள் வருடாந்தர அறிக்கையை வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் புதிய முறை, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சிங்கப்பூர் பொட்டல முறை உடன்பாட்டை இன்னும் ஒரு படி மேம்படுத்தும்.

தர்மன்: பிரிட்டனின் வெளியேற்றம் உலகப் பொருளியலை சில ஆண்டுகளாவது பாதிக்கும்

மரீனா பே சேண்ட்சில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து பிரிட்­டன் வில­கு­வ­தால் என்ன நடக்­கும் என்பதை இப்­போதைக்­குச் சொல்ல முடியாது என்றா­லும் நிலை­யற்ற தன்மை உலகச் சந்தை­களைப் பாதிக்­கும் என்று துணைப் பிர­த­மர் தர்மன் சண்­மு­க­ரத்­னம் கூறி­யுள்­ளார். பிரிட்­ட­னின் விலகல் குறித்த பேச்­சு­வார்த்தை­யும் விவாதங்களும் நடை­பெ­றும்­போது நிதிச் சந்தை­கள் தொடர்­நிலை­யான அதிக ஏற்ற இறக்­கங்களை எதிர்­கொள்­ளும் வாய்ப்­புள்­ளது என்றார் அவர். இதில் கவலை­ய­ளிக்­கக்­கூ­டி­யது என்­ன­வெ­னில் பிரிட்­டன் ஒன்­ றி­யத்­தில் இருந்து வெளி­யே­று­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளி­யல், அர­சி­யல் நிலைத்­தன்மை­யற்ற சூழல்­கள்.

Pages