You are here

சிங்க‌ப்பூர்

இடமாறு தோற்றப்பிழை சிறார்கள் தாய்மொழி கற்க மேலும் உதவி

இடமாறு தோற்றப் பிழை குறைபாடு உள்ள சிறார்களில் முன்னிலும் அதிக பேர் தாய்மொழி கற்க ஆதரவு தேடுகிறார்கள் என்று சங்கம் தெரிவித்துள்ளது. படம்: இணையம்

இடமாறு தோற்றப்பிழை என்ற குறைபாடுள்ள மாணவர்களில் மேலும் பலர் தங்களுடைய தாய்மொழியைக் கற்றுக்கொள்ள ஆதரவு தேடுகிறார் கள். தமிழ் உள்ளிட்ட தாய்மொழியைக் கற்க அவர்களுக்கு மேலும் ஆதரவு தருவது பற்றி ஆராய்வதாக சிங்கப்பூர் இடமாறு தோற்றப்பிழை குறைபாட்டுச் சங்கம் தெரிவித்திருக்கிறது. டிஸ்லெக்சியா என்று குறிப்பிடப் படும் இந்தக் குறைபாடு உள்ளவர் களுக்கு ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துகள் இடம் மாறிமாறி தெரியும். ஒலியை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பாதிக்கப்பட்டிருக்கும்.

50 ஆண்டு அரசதந்திர உறவு

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது) நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி

அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடது) நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை வா‌ஷிங்டனில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையே கடந்த 50 ஆண்டுகளாக நிலவிவரும் சிறந்த அரசதந்திர உறவுக்கு இருவரும் தங்கள் கடப் பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர். படம்: வெளியுறவு அமைச்சு

150,000 பேரை ஈர்த்துள்ள ‘பொங்கோல் சஃப்ரா’

பொங்கோல் நீர்வழிச் சவால் படகு வலித்தல் நிகழ்ச்சி

படகு வலித்தல், சைக்கிளோட்டு தல், ஓடுதல் போன்ற துடிப்பான நடவடிக்கைகளில் முன்பைவிட இப்போது அதிகமானோர் குடும்ப மாகப் பங்கேற்பது ஊக்கமளிக் கிறது என்றும் அது குடும்ப உறுப் பினர்கள் அனைவரது உடலுறு தியை மேம்படுத்துகிறது என்றும் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பேராக் ரோட்டில் தமிழ் முரசு நாளிதழின் விளம்பரப் பிரிவு

பேராக் ரோடு மாயோ ஸ்திரீட் சாலைகள் சந்திக்கும் இடத்தில் வசதியாக அமைந்திருக்கும் தமிழ் முரசு விளம்பரப் பிரிவு, மக்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கிறது.  படம்: திமத்தி டேவிட்

முஹம்­மது ஃபைரோஸ்

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­கள் செயல்­பட்டு வந்த தமிழ் முரசு விளம்ப­ரப் பிரிவு இம்­மா­தம் 6ஆம் தேதி திங்கட்­கிழமை முதல் புதிய வச­தி­களு­டன் பேராக் ரோட்டில் செயல்­படு­கிறது. ஏற்­கெ­னவே விளம்ப­ரப் பிரிவு அலு­வ­ல­கம் லிட்டில் இந்தியா, ஃபேரர் பார்க் எம்­ஆர்டி நிலை­யங்களுக்கு இடையில் அமைந்­தி­ருந்தது.

சுகாதாரப் பராமரிப்பு சவால்களை சமாளிக்க தகவல் பரிமாற்றமும் தேவை

சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட்

வருங்கால சவால்களை கணக் கில் கொண்டால் சிங்கப்பூரின் இப்போதைய சுகாதாரப் பராமரிப்பு நிலைமை தாக்குப்பிடிக்கக்கூடிய தாக இல்லை என்று சுகாதார துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார். மாநாடு ஒன்றில் பங்கேற்று நேற்று பேசிய அவர், சிங்கப்பூர் எதிர்நோக்கி இருக்கும் இரு முக்கிய சவால்களைச் சுட்டினார். விரைவாக மூப்படையும் மக்கள் தொகை, மெதுவடையும் பொருளி யல் ஆகிய இந்த இரு சவால் களும் சரிவர கவனிக்கப்படாமல் போனால் சுகாதாரப் பராமரிப்பில் பெரும் சுமையை ஏற்படுத்து வதுடன் பொருளியல் சுணக் கத்தையும் உண்டாக்கிவிடும் என்றார் திரு சீ.

மாற்றங்களைக் காண்பிக்கும் கண்காட்சி

மாற்றங்களைக் காண்பிக்கும் கண்காட்சி

கடந்த அரைநூற்றாண்டாக நடை பெற்று வரும் தேசிய தின அணி வகுப்புகளை தேசிய மரபுடைமைக் கழகம் ஆய்வு செய்து ஆவணப் படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த ஆய்வை கழகம் நடத்தியது. தேசிய தின அணிவகுப்பு கடந்த 50 ஆண்டுகளில் கண் டுள்ள மாற்றங்களை எடுத்துக் காட்டும் இந்த ஆய்வு, பொது மக்களின் பார்வைக்காக காட்சிக்கு வைக்கப்படுகிறது.

‘பிரிட்டன் விலகினால் பிரச்சினை’

வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களிக்கு மாயின் அது அந்நாட்டை வெகுவாகப் பாதிக்கும் என்றும் உலகப் பொருளியலுக்கு அது நன்மை பயக்காது என்றும் வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங் வலியுறுத்தியுள்ளார். இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கெ டுப்புக்கு முந்திய நிலவரங்களைத் தாமும் தமது அதிகாரிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மெக்சிகோ சிட்டியில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.

விவியன்: இணையத் தடை நோக்கமல்ல

விவியன்: இணையத் தடை நோக்கமல்ல

அரசு ஊழியர்களுக்கு இணையத் தடை போடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். மாறாக, இணையம் வழி தகவல் தேடுதல், இணையம் வழி பரிவர்த்தனைகள் ஆகியவற் றிலிருந்து மின்னஞ்சல் கட்டமைப் புகளை பிரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.

பையைக் கீழே இறக்க உதவாத டாக்சி ஓட்டியைத் தாக்கினார்

டாக்சியிலிருந்து தன்னுடைய பையைக் கீழே இறக்க உதவாத டாக்சி ஓட்டியைத் தலையில் குத்திய ஒரு பயணிக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிடோக் ரிசர்வோர் ரோட்டுக்கு அருகே ஜாலான் தெனா காவில் இருக்கும் ஒரு கார் பேட்டையில் சியா கோக் கியோங், 56, என்ற டாக்சி ஓட்டியைச் சென்ற ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி தாக்கியதாக டான் கோக் சுவான், 29, என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கு இணைய வசதி தொடரும்

கல்வி அமைச்சின் ஆசிரியர்கள் தங்கள் வேலையிடக் கணினி களில் தொடர்ந்து இணையச் சேவையைப் பெறுவார்கள் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் இந்தத் தகவலைக் கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. “கணினிப் பாதுகாப்பு மிரட் டல்கள் அதிகமாகிக் கொண்டு வருவதால், அரசாங்க இணையக் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படு வது மிகவும் அத்தியாவசியமாகிறது என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந் தது.

Pages