You are here

சிங்க‌ப்பூர்

தோட்டக்கலை மூலம் மனதிற்குப் புத்துணர்ச்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹைதராபாத் சாலையில் அமைந் திருக்கும் ‘ஹோர்ட்பார்க்’கில் தோட்டக்கலை மூலம் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் புதிய தோட்டம் நேற்று திறக்கப்பட்டது. குடியிருப்பாளர்களின் நல னைக் கருத்தில் கொண்டும் எவ்வித சிரமமின்றி மூப்படைய முதியோருக்கு உதவும் வகையிலும் புதிய தோட்டத்தை தேசிய பூங்கா வாரியம் திறந்து வைத்துள்ளது. திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார். பொதுப் பூங்காவில் தோட்டக் கலை மூலம் மனதிற்குப் புத்து ணர்ச்சி அளிக்கும் தோட்டம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

தெம்பனீஸ் ஆலோசகராக திரு சின்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சின் பூன் ஆன்

தெம்பனீஸ் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சின் பூன் ஆன் தெம்பனீஸ் சென்டரில் இரண்டாவது அடித்தள ஆலோசகரகாப் பொறுப்பேற்பார். நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் மருத்துவமனையில் இருக்கும்வரை அவரது அடித்தள நிலை பொறுப்புகளைத் திரு சின் கவனித்துக் கொள்வார். சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் தெம்பனீஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நடந்த சமூக நிகழ்ச்சி ஒன்றில் இதனைத் தெரிவித்தார்.

அதிபர் டோனி டான்: திரு ஹெங் சீராக உள்ளார்

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்

மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு டான் டோக் செங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டை அதிபர் டோனி டானும் அவரது துணைவியாரும் நேற்று சென்று சந்தித்தனர். திரு ஹெங் சீரான நிலையில் உள்ளதை அறிந்து தாம் நிம்மதி அடைந்துள்ளதாக தமது ஃபேஸ்புக் இணையத்தளத்தில் அதிபர் டான் குறிப்பிட்டிருந்தார். திரு ஹெங்கை அவரது குடும்பதினரும் மருத்துவமனை ஊழியர்களும் மிகவும் நல்ல முறையில் கவனித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஏமாற்றுப் பேர்வழிக்கு நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏற்கெனவே நொடித்துப்போன நிலையில் நிறுவனத்தையும் மற்றவர்களையும் வோங் கோக் கியோங் ஏமாற்றியிருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னைய துணைப்பிரதமர் வோங் கான் செங்கின் சகோதரர் என்று கூறி பலரை நம்ப வைத்து 520,000 வெள்ளி வரை ஏமாற்றிய ஒருவருக்கு நேற்று நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நொடித்துப் போனவரான வோங் கோக் கியாங் என்று அழைக்கப்படும் வோங் கோக் கியோங், 63, தற்போது $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள் ளார். அவரது மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. நொடித்துப்போனவர் சட்டத் தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

முதியோர் பராமரிப்பு; யோசனைகள் வரவேற்பு

முதியோர் பராமரிப்பு, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புதிய யோசனைகளை முன் வைக்கலாம் என்று ‘ரைஸ்’ எனும் சிங்கப்பூர் சமூக நிறுவன நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘LeapForGood’ என்ற திட்டத் தின் விவரங்கள் நேற்று நடை பெற்ற செய்தியாளர், கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டன. இந்த ஓராண்டுத் திட்டத்தின் கீழ் முதியோர் பராமரிப்பு, மன நலப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் மேம்படுத்தப் பட்டு அதற்கான யோசனைகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும் என்று நிலையம் குறிப்பிட்டது.

வேலையிடமரணங்கள்: கடுமையான தண்டனை

கட்டுமானப் பகுதியைப் பார்வையிட்ட மனிதவள துணை அமைச்சர் சேம் டான் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை­­­யி­­ட மர­­­ணங்களைத் தவிர்க்­ கும் நோக்கில் கடுமை­­­யான தண் டனை, வேலை­­­யி­­­டப் பாது­­­காப்பை மேம்படுத்­­­து­­­வ­­­தில் முத­­­லா­­­ளி­­­களுக்கு கூடுதல் ஆதரவு போன்ற­ நட­வ­டிக்கை­களை மனி­­­த­­­வள அமைச்சு மேற்­கொள்­ள­வுள்­­­ளது. வேலை­­­யி­­­டத்­­­தில் பாது­­­காப்பு, சுகா­­­தா­­­ரத் தரம் குறைவாக இருந் தால், குறைந்த­பட்ச வேலை நிறுத்த உத்­த­ரவு காலத்தை அதி­­­க­­­ரிப்­­­பது உட்பட கடும் அப­ரா­தத்தை அமைச்சு அறி­­­வித்­­­துள்­­­ளது. குறைந்த­­­பட்­­ச வேலை நிறுத்த ஆணை இரு வாரங்களில் இருந்து தற்போது மூன்று வாரங்க­­­ளாக கூட்­டப்­­­பட்­­­டுள்­ளது.

அவதிக்கு உள்ளான குதிரை; ‘கேலப் ஸ்டேபல்’ மீதான வழக்கு விசாரணை

மூன்று ஆண்டுகளுக்கு முன், கேலப் ஸ்டேபலின் பாசிர் ரிஸ் குதிரை லாயத்திலிருந்த ஒரு குதிரையைப் பரிசோதனை செய்த அரசாங்க விலங்கு மருத்துவர், அந்தக் குதிரை இரண்டு நிமிடங் களுக்கு இடைவிடாமல் தண்ணீர் குடிப்பதையும் அரை மணி நேரம் வரை தொடர்ந்து உண்பதையும் கண்டார். ஒரு குதிரை இப்படிச் செய்வதை அவர் அதற்குமுன் பார்த்ததே இல்லை. அந்த உயர்ரக பெண் குதிரை யின் வலது பின்னங்காலில் கிரு மித் தொற்றி, மோசமாக வீங்கி யிருந்தது. விலங்கு மருத்துவர், குதிரையின் காயங்களைத் தின மும் இருமுறை கழுவக் கூறினார்.

மஞ்சள் நாடா தொண்டர்களுக்கு கூடுதல் பயிற்சி

மஞ்சள் நாடா சமூகத் திட்டப் பணியின் அடித்தளத் தொண்டூழி யர்கள், கைதிகளின் பிள்ளைகளில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பவர்களை அடை யாளம் காணவும் அந்த குடும்பங்களுக்குக் கூடுதல் சமூக ஆதரவு வழங்கவும் கூடிய விரைவில் பயிற்சி பெறுவார்கள் என்று உள் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று தெரிவித்தார். ஷெரட்டன் டவர்சில் நடை பெற்ற முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயல் திட்டத்தின் (கேர்) வருடாந்தர பணித்திட்ட ஆய்வரங்கில் பேசிய திரு அம்ரின், மேம்படுத்தப்பட்ட திட்டப்பணியின் ஒரு பகுதியாகத் தொண்டூழியர்களுக்காகத் தொடங்கப்படும் புதிய திட்டங் களை அறிவித்தார்.

Pages