You are here

சிங்க‌ப்பூர்

93% ஓட்டுநரைச் சேர்த்தது கோ அஹெட்

93% ஓட்டுநரைச் சேர்த்தது கோ அஹெட்

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவையை நடத்தவிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த கோ அஹெட் நிறுவனம் தனக்குத் தேவையான பேருந்து ஓட்டுநர்களில் 93%க்கும் அதிகம் பேரை வேலையில் சேர்த் திருக்கிறது. லோயாங் பேருந்துப் பணி மனையில் நேற்று செய்தியாளர் களிடம் அந்த நிறுவனம் பல விவரங்களைத் தெரிவித்தது. சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவையை வழங்கவிருக்கும் நான்காவது நிறுவனமான கோ அஹெட், இந்த ஆண்டின் மூன் றாவது காலாண்டில் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது இதுவரையில் 655 பேருந்து ஓட்டுநர்களைச் சேர்த் திருக்கிறது. அவர்களில் 65% சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள்.

தொடக்கப்பள்ளி 1ஆம் வகுப்பு பதிவு ஜூன் 30-ஆகஸ்டு 26 வரை

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேரும் சிறார்களுக்கான பதி-வு ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 26ஆம் தேதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. இந்த மாணவர்கள் பதிவுக் காலத்தின்போது தொடக்கப்பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமைகள் முதல் வெள்ளிக்கிழமைகள் வரை காலை 8 மணியிலிருந்து முற்பகல் 11 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.30 வரையிலும் திறந்திருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரருக்கு 61 வயதில் இதய நோய்

சிங்கப்பூரர்கள், மற்ற ஆசிய நாட்டவரைப் போலவே சராசரியாக 61 வயதில் இதயம் செயலிழக்கும் நோயை எதிர்நோக்குகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இந்த வயது, அமெரிக்கர்களுக் கும் ஐரோப்பியர்களுக்கும் 70 ஆக இருக்கிறது. அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், மொத்த ஆசியர் கள் ஆகியோருடன் ஒப்பிடுகை யில் முற்றிய இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை சிங்கப்பூரர்களிடையே அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று நோய்களும் இதயம் செயல் இழக்க முக்கிய மான காரணங்களாக இருக் கின்றன.

அங் மோ கியோ காசநோய்: மருத்துவருக்குப் புகழாரம்

புளோக் 203ன் கீழ்த்தளத்தில் நடத்தப்பட்ட பரிசோதனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோவில் காசநோய் இருப்பது, மருத்துவர் சிந்தியா சீயின் மதிநுட்பத்திறனால் கண்டு பிடிக்கப்பட்டதாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ போ கூன் தெரி வித்துள்ளார். நாள்தோறும் பல வகையான நோயாளிகளைச் சந்திக்கும் மருத்துவர் ஒருவர் நான்கைந்து ஆண்டு காலமாக சிகிச்சைக்கு வந்த ஆறு நோயா ளிகளை ஒன்றுபடுத்தி இந்த நோய் பற்றி கண்டுபிடித்திருப்பது அற்புதமானது என்றும் அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஆடவரின் மூக்கை உடைத்த கதிரவன்

மோட்டார்சைக்கிள் ஓட்டி ஒருவர் கார் பேட்டையில், வாகன ஓட்டுநர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டார். இந்தச் சம்பவம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நிகழ்ந்தது என்று நீதிமன்ற விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. காயம் விளைவித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து கதிரவன் அண்ணாமலை என்ற அந்த பாரம் தூக்கி ஓட்டுநருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் உள்ள புளோக் 154ல் இருக்கும் கார்பேட்டையில் ஜனவரி மாதம் 19ஆம் தேதி இரவு சுமார் 8.40 மணிக்கு எல்சன் லீ ஜுன் லியாங், 32, என்ற பொறியாளர் ஒருவர் தன்னுடைய காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.

ஜூன் பிற்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் இந்த மாதம் இரண்டாம் பாதியில் அதிக மழை பெய்யக்கூடும். காற்றும் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இதனை அறிவித்தது. ஐந்து முதல் ஏழு நாட்களில் பகல் நேரத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக காலையில் பின்நேரத் திலும் பிற்பகலிலும் கொஞ்ச நேரத்துக்கு மழை பெய்யக்கூடும் என்று இந்த வாரியம் கூறியது. பரவலான இடியுடன் கூடிய மழை எப்பொழுதாவது காற்றுடன் சேர்ந்து 1 முதல் 2 நாட்களில் அதிகாலை நேரத்திலும் காலை நேரத்திலும் பெய்யக்கூடும்.

தொழிற்சாலையில் தீ

தொழிற்சாலையில் தீ

ஜூகூனில் பதனீட்டுத் தொழிற்சாலை ஒன்றில் நேற்றுக் காலை மூண்ட தீயைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தது. எண் 6 ஜூகூன் சர்க்கிள் முகவரியில் அதிகாலை 5.40 மணிக்குத் தீ மூண்டதாக இந்தப் படை நேற்றுக் காலை 8.30 மணி அளவில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது. தீ 400 சதுரமீட்டர் பரப்புள்ள இடத்தை ஆக்கிரமித்தது. இந்தப் படையினர் அந்த வட்டாரத்தைச் சூழ்ந்து கொண்டு எட்டு தண்ணீர் பீச்சு வண்டிகளுடன் தீயைக் கட்டுப்படுத்தினர். 90 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பொறியாளருக்கு $4,000 அபராதம்

செனாங் கிரசெண்டில் தொழில் துறைக் கட்டடத்தில் தண்ணீர்ச் சேவைச் சாதனங்களைப் பொருத் தும் பணியை மேற்பார்வையிட தவறியதற்காக நிபுணத்துவப் பொறியாளரான யிங் கீ இயோவ் என்பவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. செனாங் கிரசெண்டில் ‘பிஸ்ஹப்’ என்ற தொழில்துறைக் கட்டடத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் சோதனை நடத்தியதாகவும் அக் கட்டடத்தின் அடித்தளத்தில் கீழ்நிலை தண்ணீர்த் தொட்டிக்கு மேலே கழிவுநீர்க் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்றுத் தெரிவித்தது.

அங் மோ கியோவில் ‘டிபி’ பரிசோதனை

அங் மோ கியோ அவென்யூ 3 புளோக் 203ல் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அமைச்சு காசநோய் (டிபி) பரிசோதனை அளிக்க முன்வந்துள்ளது. அந்த புளோக்கில் உள்ள அறுவருக்கு காசநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் ஆனால் அவர்களின் நோய் ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாதது என்றும் அமைச்சு விளக்கியது. இலவசமாக அளிக்கப்படும்

அமைச்சு விளக்கம்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட புகைமூட்ட நெருக் கடிக்கு காரணமான இந்தோனீ சிய காட்டுத் தீயுடன் தொடர் புடைய நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் மேற்கொண்ட நடவடிக்கையானது சுயாதிபத்திய உரிமைப் பிரச்சினையோ தேசிய கௌரவப் பிரச்சினையோ அல்ல என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் எல்லை கடந்த காற்றுத் தூய்மைக்கேட்டை உண்டாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே எல்லை கடந்த காட்டு தூய்மைக் கேடு சட்டத்தின் நோக்கம் என்று அமைச்சு விளக்கியது.

Pages