You are here

சிங்க‌ப்பூர்

டாக்டர் சீ: நான் செய்த பணிகளின் மூலம் என்னை எடை போடுங்கள்

டாக்டர் சீ சூன் ஜுவான்

தமது சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியுடன் தாம் செய்த பணிகளை வைத்து தமது தகுதியை எடை போடும்படி வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் டாக்டர் சீ சூன் ஜுவான். தாம் பல ஆண்டுகளாக முழு நேர வேலையில் இல்லை என்று வெள்ளிக்கிழமை இரவு மசெகவின் அமைச்சர் கிரேஸ் ஃபூ சாடியதற்குப் பதிலளித் தார் திரு சீ. “பணம் ஒன்று மட்டுமே அனைத்தும் இல்லை. உங்களுக்குப் பணம் வேண்டு மென்றால் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருங்கள். அமைச்சர்களுக் கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு மற்றவர்கள் எங்களைப் போல வாங்க வில்லை என்று கூறாதீர்கள். அது கேட்பதற்கே நன்றாக இல்லை,” என்றும் நேற்று காலை செய்தியாளர்களிடம் கூறினார் திரு சீ.

பிரதமர்: இனத்தின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்களிக்கக்கூடாது

திரு எஸ் சந்திரதாஸ்

திரு முரளி ஒரு சிறுபான்மையினராக இருப்பது கட்சிக்குப் பாதகமா என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு லீ, “பல இன, பல சமயங்கள் உள்ள சமூகத்தில் மக்களின் மனதில் இனம் குறித்த சிந்தனைகள் இருக்கலாம். எனினும் இனத்தின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்களிக்காமல், அவரால் எவ்வாறு பங்களிக்க முடியும், அவரது நேர்மை, அவரது பற்று ஆகியவற்றையே பார்க்க வேண்டும்,” என்றார் திரு லீ. “பிரசார நேரங்களில் இனம் குறித்த உணர்ச்சிகள் தலை தூக்குவதும் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தெரிந்த ஒன்று. “நான் முதன்முதலில் தேர்தலில் ஈடுபட்ட 1984ஆம் ஆண்டில் என் தொகுதிக்குப் பக்கத்துத்தொகுதி சொங் பூன்.

­­மாரூஃப் பள்ளிவாசல் கட்டுமானம் 90% நிறைவு

­­மாரூஃப் பள்ளிவாசல் கட்டுமானம் 90% நிறைவு

ஜூரோங் வெஸ்ட் பகு­தி­யில் வசிக்­கும் முஸ்­லிம்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­தி­ருக்­கும் மாரூஃப் பள்­ளி­வா­சல் இவ்­வாண்டு செப்­டம்பர் மாதத்­துக்­குள் பயன்­பாட்­டுக்­கு­ வ­ரும் என முஸ்லிம் விவ­கா­ரங்களுக்­குப் பொறுப்­பு­வ­கிக்­கும் அமைச்­சர் டாக்டர் யாக்கூப் இப்­ரா­ஹிம் கூறி­யுள்­ளார். ஹஜ்ஜுப் பெரு­ நா­ளுக்கு முன்­ன­தாக இந்தப் பள்­ளி­வா­சல் கட்டுமானப் பணிகள் முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

‘தொழிலாளர் தோழர்’ விருது

என்டியுசியின் ‘தொழிலாளர் தோழர்’ விருது பெற்ற கன்னியப்பன் சுப்பிரமணியன். படம்: என்டியுசி

ப. பாலசுப்பிரமணியம்

இடுகாடுகளில் அகழ்வுப் பணி களில் ஈடுபடுவது சுலபமான காரி யம் அல்ல. அப்பணியில் பல் லாண்டு காலமாக ஈடுபடுவதோடு சக ஊழியர்களின் பிரச்சினை களைச் செவிமடுத்து அதற்குத் தீர்வு காணப் பாடுபட்ட திரு கன்னியப்பன் சுப்பிரமணியனுக்கு நேற்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ‘தொழிலாளர் தோழர்’ விருது அளித்து கெளரவித்தது. தொழிலாளர் தினத்தை முன் னிட்டு நேற்றிரவு நடந்த மே தின விருது நிகழ்ச்சியில் திரு சுப்பிர மணியன் உட்பட மொத்தம் 91 தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

முரளி: அரசியல் என்பது உன்னத கடமை

புக்கிட் பாத்தோக் இடைத்­தேர்­த­லில் மக்கள் செயல் கட்­சி­யின் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கும் திரு முர­ளி­த­ரன் பிள்ளை நேற்று நடை­பெற்ற மசெ­க­வின் முத­லா­வது பிர­சா­ரக் கூட்­டத்­தில் முக்கிய உரை நிகழ்த்­தினார். புக்கிட் பாத்­தோக்கை ஒரு பரி­வு­மிக்க சமூ­க­மாக மாற்றும் அதே வேளையில் எந்தப் பின்­ன­ணியைச் சேர்ந்த­வ­ராக இருந்தா­லும் மக்­களுக்கு உதவி கிடைக்க வழி செய்வதே தமது முக்கிய நோக்கம் என்று திரு முரளி கூறினார்.

840,000 குடும்பங்களுக்கு சேவை, துப்புரவு கட்டணக் கழிவு

வீடமைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் சுமார் 840,000 குடும்பங்கள், $86 மில்­லி­யன் மதிப்­பி­லான சேவை, துப்­பு­ரவு கட்­ட­ணத் தள்­ளு­ப­டியைப் பெற­வி­ருப்­ப­தாக நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. தகு­தி­பெ­றும் சிங்கப்­பூ­ரர் குடும்பம் ஒவ்­வொன்­றும் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்பு வகைக்­கேற்ப ஒன்று முதல் மூன்று மாதங்களுக்­கான சேவை, துப்­பு­ரவு கட்­ட­ணத் தள்­ளு­ப­டியைப் பெறும். தகு­தி­பெ­றும் குடும்பங்கள் கட்­ட­ணத் தள்­ளு­படி பற்றிய கூடுதல் விவ­ரங்களு­டன் கடி­தத்தை இம்­மா­தம் பெற்­றி­ருக்­கும்.

கட்டுமானத் தளத்தில் 24 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்

மாண்ட ஊழியரின் அருகில் மற்ற கட்டுமான ஊழியர்கள் நிற்பதாக மனோ இளங்கோவன் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட படம். படம்: ஃபேஸ்புக்

ஊழியர் ஒருவர் மரணமடைந் ததைத் தொடர்ந்து தெம்பனிஸ் கட்டுமானத் தளத்தில் பாரம் தூக் கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ள தாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் உள்ள தொழிற்பேட்டையில் சன்வே கட்டுமானத் தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த மரணம் நிகழ்ந்தது. பாரந்தூக்கும் இரும்புத் தண்டுகள், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை சன்வே கட்டுமான நிறுவனம் தயாரிக்கிறது.

போலி குடிநுழைவு இணையத்தளம்

சிங்கப்பூர் வருகையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடும் நோக்கில் போலியாக immisg-=mom.in என்னும் இணையத்தளம் செயல்படுவதாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் எச்சரித்து உள்ளது. விசா விண்ணப்ப எண்களையும் பாஸ்போர்ட் எண்களையும் அந்த இணையத் தளம் கேட்டு வருவதாக ஆணையம் கூறுகிறது. எனவே எந்தவொரு குடிநுழைவுத் தகவலுக்கும் ஆணையத்தின் அதிகாரபூர்வ www.ica.gov.sg என்னும் இணையத்தளத்தை மட்டுமே நாடுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.

1எம்டிபி விவகாரம்: சிங்கப்பூரர் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள்

மலேசியாவின் 1எம்டிபி வழக்கு தொடர்பில் குற்ற நடத்தை குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சிங்கப்பூரரான 33 வயது இயோ ஜியாவெய், 33, மீது ஏமாற்றுதல், நீதியைத் திரிக்க முயன்றது ஆகிய மேலும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது ‘பேங் ஆஃப் சைனா’ கணக்கில் 2013 ஜனவரி 30ல் $200,000 பணம் போடப்பட்டதாகவும் அந்தப் பணம் மோசடி மூலம் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

சுவிஸ் தனியார் வங்கியான பிஎஸ்ஐயின் முன்னாள் சிங்கப்பூர் கிளை ஊழியரான இயோ மீது லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுடன் கடுமையானக் குற்றச் செயல்கள் புரிந்ததாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Pages