You are here

இந்தியா

‘தினகரனின் புதிய கட்சிக்கு ஆதரவு’

சென்னை: தினகரன் புதுக்கட்சி தொடங்கும் பட்சத்தில் அவரை வெளியில் இருந்து ஆதரிக்கப்போவதாக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில், தாம் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். “தினகரன் கட்சியில் சேர்ந்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும்,” என்றார் வெற்றிவேல். தினகரன் ஆதரவு எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள், மாணவர்கள் கொந்தளிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள பேருந்து பயணக் கட்டண உயர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 25 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை உயர்த்தப் பட்ட கட்டணம் கடந்த சனிக் கிழமை நடப்புக்கு வந்தது. அப்போது முதலே எதிர்ப்புக் குரல்களும் பரவலாக எழுப்பப் பட்டு வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சி களும் தனித்தனியாகவும் கூட்டாகச் சேர்ந்தும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள் ளன.

கோவையில் மிதிவண்டித் திட்டம் அறிமுகம்

வாகனப் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் கோவையில் ‘ஸ்மார்ட் சிட்டி சைக்கிள் திட்டம்’ அறிமுகமாகி உள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள மிதிவண்டிகளை அவற்றுக்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுத்தும் இடங்களில் பெற்று குறுகிய நேரத்துக்குப் பயன்படுத்தலாம். அடுத்த மாதம் இத்திட்டம் கோவை முழுவதும் செயல் படுத்தப்படவுள்ளது.

படம்: தமிழக தகவல் ஊடகம்

35 வயது, 10 டன் எடையுள்ள மரம் வேரோடு இடமாற்றம்

கோவை: மிகப் பெரிய அரச மரம் ஒன்றை மறுநடவு செய்து கோவை மாநகர மக்களும் காவல்துறையின ரும் அதன் வாழ்வை காத்துள்ளனர். கோவையில் சாலை விரிவாக் கம், புதிய கட்டுமானங்கள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் காக பல்வேறு இடங்களில் மரங் கள் வெட்டப்படுகின்றன. இதனால் கவலை அடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வெட்டப்பட வேண்டிய மரங்களை, வேரோடு பெயர்த்தெடுத்து, மறு நடவு செய்யும் நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஏராளமான மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்து வருகிறது.

1% பணக்காரர்களிடம் இந்தியாவின் 73% சொத்துகள்; புதிதாக பல கோடீஸ்வரர்கள்

உலகளவில் கடந்த ஆண்டு திரட்டப்பட்ட ஒட்டுமொத்த சொத் துகளில் 82 விழுக்காடு பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு விழுக்காட்டுப் பேரிடம் உள்ளது.

அதேவேளை ஏழைக்கும் ஏழை யாக உள்ள பாதிப்பேரிடம் அதா வது 3.7 பில்லியன் மக்களுக்கு சொத்து என்று எதுவும் கடந்த ஆண்டு கிடைக்கவில்லை. ஆக்ஸ்ஃபேம் என்னும் அற நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் இது தெரிய வந்துள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கிற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நக ரில் உலகத் தலைவர்கள் கூட தயாராகிவரும் வேளையில் அந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப் பட்டது.

தமிழகம் முழுவதும் எட்டு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தை மாதம் பிறந்ததும் தமிழகத் தில் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக் கம். முறையான திருமணங் களோடு சட்டவிரோத திருமணங் களும் தை மாதத்தில் அதிமாக நடப்பது உண்டு. தை பிறந்து பத்து நாள்கூட முடியாத நிலையில் எட்டு சட்ட விரோத குழந்தைத் திருமணங் களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாத இடையில் தை பிறந்தது முதல் ஜனவரி இறுதிவரை 12 குழந்தைத் திருமணங்கள் அவை நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டன.

12 நாட்களில் விற்றுத் தீர்ந்த 12 லட்சம் புத்தகங்கள்

சென்னை: கடந்த 13 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை புத்தக திருவிழாவில் லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. புத்தக திருவிழாவின் கடைசி தினமான நேற்றும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனையான தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். “இந்தாண்டு புத்தகத் திருவிழா பல புதிய சாதனைகளை படைத்துள் ளது. முதல் 12 நாட்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையா கின. அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு லட்சம் புத்தகங்கள் விற்ப னையாகின. கடந்தாண்டு 10 லட்சம் புத்தகங்கள் விற்பனை யாகின. அந்தச் சாதனை தற்போது முறியடிக்கப் பட்டுள்ளது,” என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

நானும் சசிகலாவும் மட்டுமே அரசியலில் உள்ளோம் - தினகரன்

சென்னை: தங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை சசிகலாவும் தானும் மட்டுமே அரசியலில் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தங்கள் குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை அதிமுகவின் கருத்தாக கருதக் கூடாது என்றார். ஜெயலலிதா மரணம் தொடர் பாக பிறர் தெரிவிக்கும் தகவல்கள் குறித்து தாம் கருத்து ஏதும் தெரி விக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக அம்மா அணி என்ற பெயர் கிடைக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் என்றார்.

பழனிசாமி: பலரும் பகல் கனவு காண்கிறார்கள்

சென்னை: எம்ஜிஆரை வைத்து அரசியல் செய்வது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். சென்னையில் நடை பெற்ற எம்ஜிஆர் நூற் றாண்டு விழாவில் பேசிய அவர், உழைப்பால் மட்டுமே ஒருவர் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்றார். தமிழகத்தில் அரசிய லுக்கு வருவதாக கூறுபவர் கள் பகல் கனவு காண்ப தாக விமர்சித்த முதல்வர், அவர்களது கனவு நிறைவேறாது என்றார். “தமிழகத்தில் எத்த னையோ பேர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வருகிறார்கள்.

வீடுகள் திடீர் அகற்றம்: மக்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சி ‘சிட்டி கிளீ னிங்’ என்ற பெயரில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளை அத்துமீறி அகற்றி யும் பல பட்டியலின மக்களுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பியும் இருக்கிறது. இதையடுத்து தமிழ்ப்புலிகள், இயற்கை மீட்பு இயக்கம், விடுத லைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இந்நடவடிக்கையை எதிர்த்து சாலை மறியலில் ஈடு பட்டன. படம்: தமிழக ஊடகம்

Pages