You are here

இந்தியா

நாடாளுமன்றத்தில் பொருள் சேவை வரி மசோதா நேற்று நிறைவேறியது

புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருள் சேவை வரி மசோதாவில் அதிபர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேறியதால் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

ஜெட்லி: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி தருகிறோம்; சிறப்பு அந்தஸ்து இல்லை

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தரமுடியாது. ஆனால், அம்மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில்கொண்டு அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவின் பொல்லாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன் வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடனை அடைக்க குழந்தையை விற்பனை செய்த தம்பதி கைது

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடனை அடைக்க குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதியை போலிசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் காலித். இவரது மனைவி சயீதா. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்று அவர்களுக்கு இருந்த கடனை அடைத்துவிட முடிவு செய்தனர்.

பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற 12 பேர் பலி

துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றவர்களில் 12 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர்.

சிவமொக்கா: துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றவர்களில் 12 பேர் படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். உயிரி ழந்த அனைவருமே ஹடோன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிவமொக்கா தாலுகா, -ஹடோனஹள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அக்கிராம இளை ஞர் குழுவினர் செய்திருந்தனர். 5 அடி உயரத்தில் மொத்தம் 4 பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.

‘கலவரங்களைச் சமாளிக்க காஷ்மீர் அரசு தவறிவிட்டது’

படம்: ராய்ட்டர்ஸ்

புது­டெல்லி: காஷ்மீர் நில­வ­ரம் குறித்து ராஜ்­நாத்­சிங் தலைமை­யில் நடந்த அனைத்­துக் கட்சிக் கூட்­டத்­தில், அம்­மா­நில அரசு கல­வ­ரங்களைச் சமா­ளிக்கத் தவ­றி­விட்­ட­தாக குற்றம் சாட்­டப்­பட்­டது. நேற்று நடந்த இக்கூட்­டத்­தில் காஷ்மீர் பிரி­வினை­வா­தி­களு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வது இல்லை என்றும் முடிவு செய்­யப் ­பட்­டுள்­ளது.

‘பொகிமோன் கோ’ விளையாட்டுக்கு தடை கோரி வழக்கு

திறன்பேசிகளில் விளையாடும் ‘பொகிமோன் கோ’ விளை யாட்டு மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, அதற்குத் தடைவிதிக்க கோரி பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாகக் காண்பிக்கும். அந்த இடத்திற்கு நடந்து சென்றால் அவற்றைப் பிடிக்கலாம். இப்படித்தான் இதை விளையாட வேண்டும். இந்த திறன்பேசி விளை யாட்டு வழிபாட்டுத் தளங்களில் முட்டைகள் இருப்பதாகக் காட்டுவதால் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அனில் தேவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுவாதியைக் கொன்ற உண்மைக் குற்றவாளி: திலீபன்

திலீபன் மகேந்திரன்

சென்னை: இளம்பெண் சுவாதியைக் கொன்ற உண்மையான குற்றவாளி யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன் என திலீபன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். சுவாதி படுகொலை வழக்கு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்களை வெளியிட்டதால் இவர் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் கைதான அவர் தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.

பொய் வழக்கைச் சட்டப்படி சந்திக்க தயார்: நெப்போலியன்

கடலூர்: தம் மீதான தேர்தல் வழக்கைச் சட்டப்படி சந்திக்க தயார் என நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீதியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவானது.

இதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. அழகிரி உள்ளிட்டோர் மீது தனித்தனி வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மக்களைத் திசைதிருப்புகிறது தமிழக அரசு - டெங்கி பற்றி கருணாநிதி

சென்னை: தமிழக அரசு தவறான தகவலைச் சொல்லி மக்களைத் திசை திருப்பக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். மக்கள் டெங்கிக் காய்ச்சல் தொடர்பில் பீதியில் இருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். எனவே எதார்த்த நிலையை உணர்ந்து அரசு விழித்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி உள்ள அவர், தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சல் உண்மையிலேயே அறவே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார்.

ரயிலில் அடிபட்டு நால்வர் பலி

சென்னை: ரயிலில் அடிபட்டு நால்வர் பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் இடையேயான ரயில் பாதையில் சென்ற 4 பேர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த 4 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், ரயில் தண்டவாளங்களைக் கடக்கும்போது கவனமாக இருக்க வேண்டுமெனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Pages