You are here

திரைச்செய்தி

நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்

சுஜிபாலா -  பிரனேஷ்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை சுஜிபாலா கத்தாரில் நட்சத்திர தங்கு விடுதியில் பணியாற்றி வரும் ஊட்டியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுஜிபாலா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சினிமா நடிகையானார்.

சூர்யாவின் அடுத்த படங்கள்

சூர்யா

முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், அடுத்து என்ன செய்வார்கள்? என்பதைத் தெரிந்துகொள்வதில் எந்த ரசிகருக்குத்தான் ஆர்வம் இருக்காது?

அந்த வகையில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்துப் பார்ப்போம். நடிகர் சூர்யா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

ஒரு கனவு போல

புதுமுகம் அமலா கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘ஒரு கனவு போல’. ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன்

புதுமுகம் அமலா கதாநாயகியாக அறிமுகமாகும் படம் ‘ஒரு கனவு போல’. ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் நாயகர்கள். “லாரி ஓட்டும் இளைஞருக்கும் திரைப்படப் பாடகர் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒருவருக்கும் இடையே உள்ள நட்பின் வலிமையைச் சொல்லும் படம் இது. வாழ்க்கையே ஒரு கனவு போல்தான், அதை வாழ்ந்தே தீரவேண்டும் என்கிற யதார்த்த கருத்தைப் பதிவு செய்திருக்கிறோம்,” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் வி.சி.விஜயசங்கர்.

வசந்தபாலன்: இயக்குநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

‘மெர்லின்’ படத்தில் விஷ்ணு பிரியன், அஸ்வினி.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைய திரைப்பட இயக்குநர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண் டும் என இயக்குநர் வசந்தபாலன் அறிவுரை கூறியுள்ளார். ‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணுபிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு, கன்னடப் படங்களில் தோன்றியுள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர்.

கிராமத்துப் பெண்ணாக மகிமா

‘குற்றம் 23’ என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தென்றல் என்ற ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார் மகிமா. இந்தப் படம் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவி செய்திருப்பதாகக் கூறுகிறார். “கேரளாவில் நகரத்துப் பெண்ணாக வளர்ந்த நான் கிராமத்துப் பெண்ணாக நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இதைப் புரிந்துகொண்ட இயக்குநர் ராஜ்குமார் படப்பிடிப்பு நடந்த திருவண்ணாமலை பகுதியிலுள்ள கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் பேசிப் பழகச் சொன்னார்.

விசாகா: தனிப்பட்ட திருப்தியே முக்கியம்

விசாகா சிங்

தமிழில், ‘பிடிச்சிருக்கு’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘வாலிபராஜா’, ‘பயம் ஒரு பயணம்’ ஆகிய படங்களில் நடித்தவர் விசாகா சிங். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை எனப் பெயர் வாங்கியுள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப் பம் இல்லையாம். எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் என்பதே விசாகாவின் கொள்கையாம். “ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அது மற்றவர்க ளால் பாராட்டப்படுகிறதா எனப் பார்க்க வேண் டும்.

விரைவில் வெளியீடு காண்கிறது ‘கத்திசண்டை’

விஷால், தமன்னா

விஷால், தமன்னா இணைந்து நடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் வடிவேலு. சூரியும் இருப்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. ரசிகர்கள் வயிறு, சிரித்துச் சிரித்தே புண்ணாகும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறோம்,” என்கிறார் இயக்குநர் சுராஜ். விஷால்தான் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படம் மிக விரைவில் வெளியீடு காண்கிறது.

சின்னத்திரைக்கு வருகிறார் சினேகா

சினேகா

அண்மைக்காலம் வரை சன் தொலைக் காட்சியின் தரமிக்க படைப்புகளாக விளங்கின ராடன் டி.வியின் தொடர்கள். சன் தொலைக்காட்சி நிர்வாகம் ராடன் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர் ராதிகாவுக்கும் எல்லா வகையிலும் முன்னு ரிமையும் முக்கியத்துவமும் அளித்தது. இந்நிலையில் ராதிகாவுக்கும் சன் தொலைக்காட்சிக்குமான பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. ராதிகாவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கு சரியான நபர் யார் என்று எப்படி எப்படியோ யோசித்தவர்களுக்கு மனதில் தோன்றியவர் குஷ்புதானாம்.

விஜய் நடிக்கும் ‘பைரவா’

விஜய்

விஜய் நடித்து வரும் 60ஆவது படத்திற்கு ‘பைரவா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தின் முதல் சுவரொட்டி வெளியானதை யடுத்து படத் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007இல் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் ‘அழகிய தமிழ் மகன்’. இப்படத்தை இயக்கியவர் பரதன். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவான படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் நடிக்கும் 60ஆவது படம் என்பதால் அவரது ரசிகர் கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

‘ஆரம்பமே அட்டகாசம்’ படக் குழுவினருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

‘ஆரம்பமே அட்டகாசம்’ படக் குழுவினருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

‘லொள்ளுசபா’ புகழ் ஜீவா நடிக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் முன்னோட்டத்தை இன்று விஜய் சேதுபதி வெளியிடுகிறார். இப்படத்தின் முதல் சுவரொட்டியையும் அவர்தான் வெளியிட்டார். அது மட்டுமல்ல, இப்படத்தின் இயக்குநர் ரங்கா முன்பு உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது அவரைப் பற்றி விஜய் சேதுபதிக்கு நன்கு தெரியுமாம். “ரங்கா நல்ல திறமைசாலி. அவர் வெற்றி பெற வேண்டும். இப்படத்தின் தலைப்பைப் போலவே, இப்படக் குழுவினருக்கு எல்லாம் அட்டகாசமாக அமைய நான் வாழ்த்துகிறேன்,” என்கிறார் விஜய் சேதுபதி. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

Pages