You are here

திரைச்செய்தி

அனுஷ்காவை கவர்ந்த ஆண்கள்

அனுஷ்காவை கவர்ந்த ஆண்கள்

கண்களை மறைக்க கண்ணாடி அணியும் ஆண்களை அனுஷ்காவுக்கு அறவே பிடிக்காதாம். ஏன்? என்று கேட்டால் அலுத்துக் கொள்ளாமல் விரிவாக விளக்கமளிக்கிறார். ஒருவர் கண்ணை பார்த்து அவர் எந்த மாதிரி ஆண் என்று கணிக்க முடியும் என்பது அனுஷ்காவின் நம்பிக்கை. கண்களுக்கு பெரிய சக்தி இருப்பதாகவும் சொல்கிறார். “அதேபோல் முகபாவம், பேச்சு, உடல் மொழி களை வைத்தும் ஒருவரை எடை போடலாம். சிரிப் பும் ஒருவரின் தரத்தை வெளிப்படுத்தும். நான் ஆண்களின் கண்களைத்தான் முதலில் பார்ப்பேன். நல்ல மனிதர் என்றால் பார்வையில் நேர்மை தெரியும். நேர்மையான ஆண்களை எனக்குப் பிடிக்கும். அவர்களிடம் நன்கு பேசிப் பழகுவேன்.

முருகதாஸ் இயக்கத்தில் தீபிகா

முருகதாஸ் இயக்கத்தில் தீபிகா

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க இருக்கிறார். விஜய் நடித்த ‘கத்தி’யை தொடர்ந்து இந்தியில் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கினார் முருகதாஸ். இதில் சோனாக்‌ஷி சின்ஹா, ராய்லட்சுமி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் அடுத்து அஜித் படத்தை ஒன்றை இயக்கப் போவதுதாக கூறப்பட்டது. பிறகு, மகேஷ் பாபு படத்தை இயக்கப் போவதாக அவரே அறிவித்தார். இது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் தயாராகிறது.

அழகைக் குறைத்து நாயகனாக நடிக்கும் இயக்குநர்

 ‘கொள்ளிடம்’ படக் காட்சியில் முரளி, லூதியா

புதுமுகம் நேசம் முரளி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் ‘கொள்ளிடம்’. இப்படத்தில் புதுமுகம் லூதியா நாயகியாக அறிமுகமாகி றார். இவர்களுடன் ராசிக், வடிவுக்கரசி, இயக்குனர் வேல்முருகன், ராமச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் நேசம் முரளி. “மனிதர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே அழகாக பிறக்கிறார்கள். மற்றவர்கள் அவ்வளவு அழகானவர்கள் என்று சொல்ல முடியாது. அப்படி அழகில்லாத ஒருவனின் காதல் கதை இது. “சொந்த அழகை குறைத்து நடிக்க வேண்டும் என்று பல நாயகர்களிடம் கேட்ட போது நடிக்க மறுத்து விட்டார்கள். எனவே நானே அந்த வேடத்தில் நடிக்கிறேன்.

‘மான் கராத்தே’, ‘ரஜினி முருகன்’ படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன

நடனமாட அஞ்சும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நடனம் என்றால் நடுக்கம் வருமாம். ‘ரஜினி முருகன்’ வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 11வது படம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ‘ரஜினி முருகன்’ படங்களில் நடனம் ஆடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். “சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நடனம் ஆட வேண்டும் என்றாலே நடுங்கிவிடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை. பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும்.

சூர்யா: மக்கள் வாக்களித்தால் ஒருநாள் வசூலை விட்டுத்தர தயார்

சூர்யா: மக்கள் வாக்களித்தால் ஒருநாள் வசூலை விட்டுத்தர தயார்

சூர்யா, சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘24’. ரசிகர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடுகிறீர்களே, வசூல் பாதிக்கப்படாதா என்று கேட்டால், அர்த்தத்துடன் சிரிக்கிறார் சூர்யா. “நூறு விழுக்காடு வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு நானும் பங்களிப்பு செய்துள்ளேன்.

பிரசாந்த்: பொருத்தமான நாயகன் கிடைத்தார்

‘புரூஸ் லீ’ படத்தின் ஒரு காட்சியில் ஜி.வி. பிரகாஷ், கிரித்தி.

ஜி.வி. பிரகா‌ஷுக்கு இது புத்துணர்ச்சி ஆண்டு. இசையமைப் பாளராக இருந்த அவர் நடிப்பில் கால்பதித்து மூன்றாவது வெற்றிக்கு மிக அருகில் காத்தி ருக்கிறார். இப்போது ஜி.வி. பிரகா‌ஷின் ‘புரூஸ் லீ’ கிட்டத்தட்ட தயாராகி விட்டது. ‘நாளைய இயக்குநராக’ பளிச்சென வெளியில் வந்த பிரசாந்த் பாண்டியராஜ்தான் இயக்கம். திடீரென நகைச்சுவைப் படத் தில் நடிக்கிறீர்களே? “நாமெல்லாம் வீட்டில் ஜோக்கடித்து சிரிக்கிறோமே... நமக்கு யாராவது சொல்லியா கொடுத்தார்கள்? எதையும் சிரமம் என நினைத்தால்தான் சிரமம். நாமும் நகைச்சுவையில் அசத்து வோம் என்று முடிவு செய்து களமிறங்கிவிட்டால், பிறகு நாம் செய்வதே நகைச்சுவை.

விஷாலுக்குப் பாராட்டு

நடிகர் விஷால்

நடிகர் விஷால் ஒரு செயல்வீரர் என நடிகர் கமல்ஹாசன்  பாராட்டி உள்ளார். நடிகர் சங்க விவகாரத்தில் தாம் தவறு செய்துவிட்டதாகவும் பகிரங்கமாக அவர் தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) சார்பில் சிறப்பு மே தின விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் அரங்கில் இந்நிகழ்வு நடந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத் ரேயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். 

உண்மைச் சம்பவத்தை படமாக்கும் இயக்குநர்

‘அவளை நான் சந்தித்தபோது’ படத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படத்திற்கு ‘நான் அவளை சந்தித்த போது’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய வேடமேற் றுள்ள நிலையில், இமான் அண் ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சிங்கமுத்து என பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு

சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்திருக்கின்றனர். அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிம்பு தனது புதிய படத்தின் தலைப்பை அறிவிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார். ‘ஏஏஏ’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த அந்தப் படத்தின் புதிய தலைப்பை, சொன்னபடி நள்ளிரவு 12.01 மணியளவில் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்தார்.

தமிழ்ப் படங்களுக்கு தற்காலிக முழுக்கு

மாளவிகா.

பல படங்களில் நடித்துவரும் மாளவிகா மேனன் சிறிது காலம் தமிழில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டிருக்கிறார். ‘இது வேற மாதிரி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மேனன், பின்னர் ‘விழா’ படத்தில் நாயகி ஆனார். ‘நிழலா நிஜமா’ படத்திலும் நடித்தார். இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்குத் தற்காலிக விடுமுறை விட்டிருக்கிறார். ஏனாம்? “இப்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.

Pages