You are here

திரைச்செய்தி

சிம்பு நடிப்பைக் கண்டு வியந்த ரிச்சா

ரிச்சா கங்கோபாத்யா

‘ஒஸ்தி’ படத்தில் நாயகி ரிச்சா கங்கோபாத்யாவிடம், “உன் அழகைக் கண்டு நான் வியக்கேன்...” என்பார் சிம்பு. இப்போது அது அப்படியே தலைகீழாக மாறி, நாயகி ஆன்ட்ரியா, “சிம்புவின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. சிம்புவுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும் இப்படம் தமக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

மீண்டும் இரட்டை வேடங்களில் விஜய்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரட்டை வேடங்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ‘தெறி’யைத் தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அவ ரது ஜோடியாக கீர்த்தி சுரே‌ஷும், நகைச்சுவை வேடத்தில் சதீ‌ஷும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் இப்படத் தில் இரட்டை வேடங்களில் நடிப்ப தாகக் கூறப்படுகிறது. ஒரு வேடத் தில் திருநெல்வேலி வட்டார மொழியில் பேசுபவராகவும், மற்றொரு வேடத்தில் மொட்டையடித்த தோற்றத்துடனும் விஜய் நடித்து வருகிறாராம்.

சமுத்திரக்கனி படத்தில் தொண்டனாக ஜெயம் ரவி

ஜெயம்ரவி

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்க இருக்கும் படத்திற்கு ‘தொண்டன்’ என பெயர் வைக்க இருக்கிறார்கள். ‘தனி ஒருவன்’, ‘மிருதன்’ வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி இப்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடி ஹன்சிகா மோத்வானி. மேலும் முக்கிய கதா பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்திற்கு ‘தொண்டன்’ என்று தலைப்பு வைக்கிறார்களாம். ஏற்கெனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிழ வைத்த விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

பொதுவாக தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்திலும் பந்தாவுக்கும் பகட்டும் குறைவே இருக்காது. முன்னணிக் கலைஞர்கள் என்றாலே ஒருவித அலட்டலும் ஆடம்பரமும் இருக்கும். தாம் படப்பிடிப்புக்கு வரும்போது இயக்குநரே ஓடி வந்து கதவைத் திறந்துவிட வேண்டும் என்று கூறிய கதாநாயகர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பிரியாமணிக்கு கெட்டிமேளம்

பிரியாமணி

பிரியாமணி நீண்ட நாட்களாகவே ஒருவரைக் காதலித்து வந்தார் என்பது தெரிந்த சங்கதி தான். இந்நிலையில், அவரது நிச்சயார்த்தம் எளிமையாகவும், ரகசியமாகவும் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பிரியாமணியின் வீட்டில் நடந்த இந்நிகழ்வில் அவருக்கு நெருக்க மானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. பின்னர் அமீர் இயக்கத்தில் ‘பருத்திவீரன்’ படத் தில் நடித்தார். அந்த ஒரே படம் பிரியாமணியின் மதிப்பை உச்சிக்குக் கொண்டு சென்றது. ‘பருத்திவீரன்’ படத்துக்காக அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது.

கலையரசனுக்கு ஜோடியான ஜனனி

கலையரசனுக்கு ஜோடியான ஜனனி

‘மெட்ராஸ்’ படம் மூலம் புகழ் பெற்ற கலையரசன் நடிக்கும் புதிய படத்தில் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் மூலம் புகழ் பெற்றவர் கலையரசன். இந்தப் படத்தில் கலையரசனின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்படத்தை அடுத்து ‘டார்லிங் 2’ படத்தில் நடித்தார். இப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

மும்பை படப்பிடிப்பில் பங்கேற்கும் தனுஷ்

தனுஷ்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்க இருக்கிறது. இப்படத்தில் தனு‌ஷுக்கு இணையாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கு இரு வாரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த உள்ளனராம்.

‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளு

‘இது நம்ம ஆளு’ நமக்கேத்த ஆளு

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என்று வெகு நாட்களாக காத்திருந்த ‘இது நம்ம ஆளு’ படம் உலகெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஐடி கம்பெனி’யில் மேலாளராக வரும் சிம்பு, தன்னை வருத்திக்கொள்ளாமல் இயல்பாக வசனம் பேசி, நடித்து ரசிகர்களை அசத்தியிருக்கிறார். காதல் பற்றி ஒவ்வொரு காட்சியிலும் இவர் கொடுக்கும் ‘பஞ்ச்’ வசனங்கள் இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். வழக்கமான சண்டைக் காட்சிகள் என்று இல்லாமல், ஒரு பெண்ணிடம் அடங்கிப் போகும் வாலிபராக இந்தப் படத்தில் நடித்துக் கைத்தட்டல் பெறுகிறார்.

சாய் பல்லவி: மருத்துவத் தொழில் செய்துகொண்டே நடிப்பைத் தொடர்வேன்

சாய் பல்லவி: மருத்துவத் தொழில்  செய்துகொண்டே நடிப்பைத் தொடர்வேன்

‘பிரேமம்’ படத்தில் நடித்த சாய் பல்லவி தற்போது மருத்துவப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறார். மீண்டும் அவர் நடிக்க வருவாரா என்பதுபற்றி கேட்டபோது, “ஜார்ஜியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். அதன் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து மகிழ்ந்தேன். நடிப்பா? மருத்துவப் பணியா? என்பதுபற்றி எதையும் திட்டமிடவில்லை. ஆனாலும் இன்னும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிப்பைத் தொடர விரும்புகிறேன்.

அதிக படங்களில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

‘ரஜினி முருகன்’ படத்தை முடித்த கையோடு ‘ரெமோ’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப் படத்திலும் அவருக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களைவிட இப்படம் மிகப்பெரிய வரவுசெலவுத் திட்டத்தில் தயாராகியிருக்கிறது. தற்போது அப்பட வேலைகள் முடிந்ததை அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Pages