You are here

திரைச்செய்தி

ஸ்ரேயா ரெட்டி மறு பிரவேசம்

‘திமிரு’ படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு அவர் விஷாலின் அண்ணனை மணந்து அவருக்கு அண்ணியாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு படங் களில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார் ஸ்ரேயா ரெட்டி. தற்பொழுது ‘அண்டாவ காணோம்’ படத்தின் கதையைக் கேட்டதும் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தைத் தயாரித்துள்ள ஜே. சதீஷ் குமார் கூறியபோது, “அண்டாவ காணோம்’ நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத் தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய நகைச் சுவை படமாக இருக்கும்.

இந்தியா-நேப்பாளம் இடையே பேருந்து சேவை

நேப்பாளம்: கர்நாடகாவில் கடந்த ஒருவார காலமாக சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேப்பாளத்திற்குச் சென்றார். அங்கு நேப்பாளத்தின் ஜானக்பூர், உ.பி.யின் அயோத்திக்கு இடையிலான பேருந்து சேவையைப் நேப்பாளப் பிரதமர் ஷர்மா ஒலியுடன் இணைந்து மோடி துவக்கி வைத்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், இருநாடுகளுக்கு இடையிலான பேருந்து சேவை யைத் துவக்கி வைப்பதில் நிறைவாக உள்ளது. இதன்மூலம் இருநாட்டு மக்களுக்கு இடை யிலான உறவு மேம்படும் என்றார்.

காதலால் கலவர பூமியாகும் ஊரின் கதை ‘தேவகோட்டை காதல்’

காதலால் கலவர பூமியாகும் ஊரின் கதை ‘தேவகோட்டை காதல்’

ஹப்பாஸ் மூவிலைன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘தேவகோட்டை காதல்’. நாயகன் சீனு, நாயகி கவிதா ஆகிய இருவருமே புதுமுகங்கள். அமைதியாக இருக்கும் ஊரில், இளம் ஜோடியின் காதலால் கலவரம் மூள்கிறது. இந்தக் கலவரம் அடங்குகிறதா? காதல் கைகூடுகிறதா? என்பதே இப்படத்தின் கதையாம். ஏ.ஆர்.கே. இயக்கியுள்ளார். ஜோனபக்தகுமார் இசையமைத்துள்ளார்.

‘நர்மதா’வில் நடிக்கும் நந்திதா

நந்திதா

புதிய படம் ஒன்றில் ஏழு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார் நடிகை நந்திதா. இது ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கதை. கதை நாயகனாக விஜய் வசந்த்தும், கவுரவ வேடம் ஒன்றில் முன்னணி நாயகனும் நடிக்க இருப்பதாகத் தகவல். கீதா ராஜ்புத் இப்படத்தைத் தயாரித்து இயக்குகிறார்.

“இந்தப் படத்துக்கு ‘நர்மதா’ என தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட நாட்களாகவே பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கவேண்டும் என விரும்பினேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது.

‘டிராஃபிக் ராமசாமி’

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டத்தை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டார். இந்நிகழ்வில் பேசிய அவர், டிராஃபிக் ராமசாமி ஓர் அரிய வகை சமூக செயற்பாட்டாளர் என்று பாராட்டு தெரிவித்தார். அவரின் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படைப்பு நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார் சகாயம். இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

விஷால் படத்துக்கு திடீர் முட்டுக்கட்டை

விஷால், சமந்தா

விஷால் நடிக்கும் ‘இரும்புத் திரை’க்கு புதிய சிக்கல் எழுந் துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்திக்க இருப்பதாக தயாரிப்பாளரும் விநியோகிப் பாளருமான பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி விஷால் நிறைய நல்ல விஷ யங்களை செய்துள்ளதாகவும், அதனால் இப்படத்தை தாம் வெளி யிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அருள்நிதி: சினிமாத்தனம் இல்லை

தனது படங்களை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் அருள்நிதி. எப்போதும் ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பதாகவும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் தற்போது வெளியீடு காண்கிறது. இதில் சினிமாத்தனமாக தாம் எதையும் செய்யவில்லை என்றும், தமது கதாபாத்திரம் யதார்த்தமானதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். “நான் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறேன். இது எனது 10ஆவது படம். நல்ல படங்களைக் கொடுத்தால் தான் அனைவரும் அதை திரையில் காண விரும்புவர்.

ஒருவழியாக வெளியீடு காண்கிறது ‘பொட்டு’

பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு’ படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் இப்படம் திரை காணவில்லை. ஆனால் இம்முறை எந்தப் பிரச்சினையும் வராது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வடிவுடையான் இயக்கி உள்ள இப்படம் மருத்துவத் துறை சார்ந்த சில சர்ச்சைகளை அலசுமாம். பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

‘நடிகையர் திலகம்’ படத்தில் மாளவிகா

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ‘நடிகையர் திலகம்’ படம் குறித்து புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்படத்தில் ஜெமினி கணேசனின் முதல் மனைவி வேடத்தில் மாளவிகா நாயர் நடித்துள்ளார் என்பதே அண்மைய தகவல். அதே போல் நடிகை சாவித்திரியின் தோழியான சுசீலாவாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்றை நடிகை காஜல் அகர்வால் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக வெளியீடு காண்கிறது ‘பொட்டு’

பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு’ படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் இப்படம் திரை காணவில்லை. ஆனால் இம்முறை எந்தப் பிரச்சினையும் வராது எனப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வடிவுடையான் இயக்கி உள்ள இப்படம் மருத்துவத் துறை சார்ந்த சில சர்ச்சைகளை அலசுமாம். பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

Pages