You are here

விளையாட்டு

கெமரூன் காற்பந்து ஆட்டக்காரர் மரணம்

 பேட்ரிக் எகேங்

புக்காரஸ்ட்: கெமரூன் காற்பந்துக் குழு மற்றும் டைனமோ புக்காரஸ்ட் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் பேட்ரிக் எகேங், ருமேனிய காற்பந்து லீக் போட்டியில் வீட் டொருல் கொன்ஸ்டான்டாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஏற் பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். ஆட்டத்தின் 63வது நிமிடத் தில் மாற்று ஆட்டக்காரராக 26 வயது எகேங் களமிறங்கினார்.

தொடர் தோல்வியில் இருந்து மீண்ட டோனியின் அணி

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எட்டு போட்டிகளில் பங்கேற்று ஆறில் தோற்றிருந்த டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி ஒருவழியாகத் தோல்விப் பாதையில் இருந்து மீண்டுள்ளது. கடந்த பருவங்களில் மோசமாகச் செயல்பட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி இம்முறை ராகுல் டிராவிட் பயிற்சியின்கீழ் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த நிலையில், வெற்றியைத் தொடரும் நோக்குடன் அந்த அணி புனே அணியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தது. ஜாகீர் கான் இல்லாததால் டூமினி டெல்லி அணியை வழிநடத்தினார்.

இறுதிப் போட்டியில் லிவர்பூல்-செவியா

லிவர்பூல்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரின் இறுதி ஆட்டத் தில் ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லக் காத்திருக்கும் ஸ்பெயினின் செவியா குழுவுடன் லிவர்பூல் குழு மோதவிருக்கிறது. ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த அரையிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினின் வியாரியால் குழுவை வீழ்த்தியது. முதல் சுற்று அரை இறுதியில் 0-1 எனத் தோற்று இருந்ததால் நேற்றைய ஆட்டத்தில் குறைந்தது இரு கோல்கள் வித்தி யாசத்தில் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அக்குழு இருந்தது.

80 வயதிலும் ராஜநடை போட்ட ராஜேந்திரன்

திரு ராஜேந்திரன்

இந்தத் தொழில்நுட்ப, நாகரிக உலகில் உடற்தகுதி யின் அவசியம் குறித்து இளையர்கள் பலர் அறிந்திருந்தபோதும் உடற்பயிற்சிக்கும் விளையாட் டிற்கும் அவர்கள் போதிய நேரத்தைச் செலவிடுவது இல்லை என்பதே உண்மை. அதிகரித்து வரும் உடற் பருமன் பிரச்சினையே இதற்குச் சான்று. அத்தகையோருக்கெல்லாம் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் திகழ்கிறார்

உலக சாதனை தகர்ப்பு

 சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ

லிஸ்பன்: உடற்குறையுள்ளோருக் கான ஐரோப்பிய வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ (படம்) 100 மீ. பின்நீச்சல் (எஸ்2) பிரிவில் புதிய உலக சாதனை படைத்தார். போர்ச்சுகலின் ஃபுன்ச்சல் நகரில் அப்போட்டிகள் நடந்து வரு கின்றன. அதில், 2008 பெய்ஜிங் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரான யிப், 100 மீ. தூரத்தை 2 நிமிடம் 9.79 வினாடி களில் மல்லாந்து நீந்திக் கடந்து தங்கத்தைத் தனதாக்கினார்.

மட்ரிட் குழுக்கள் மல்லுக்கட்டு

மட்ரிட் குழுக்கள் மல்லுக்கட்டு

மட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ஒருமுறையேனும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் கனவு, கனவாகவே தொடர்கிறது. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் உள்ள பெர்னபாவ் விளையாட்டரங் கில் நேற்று அதிகாலை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத் தில் ரியால் மட்ரிட் குழுவிடம் 1=0 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது சிட்டி. இவ்விரு குழுக்களுக்கு இடையே சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டம் ஒரு கோல்கூட அடிக்கப் படாமல் இரு தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

தேசிய குழு பயிற்றுவிப்பாளர்: சுந்தரமூர்த்திக்கு வாய்ப்பு

சுந்தரமூர்த்தி

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் காற்பந்து நட்சத்திரங்களான சுந்தரமூர்த்தி, ஃபாண்டி அகமது ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இரண்டு வாரங்களுக்குமுன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பெர்ன் ஸ்டாங்க. இதையடுத்து, மீண்டும் ஒரு வெளிநாட்டவரையே அப்பதவியில் அமர்த்த சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் (எஃப்ஏஎஸ்) திட்டமிட்டிருந்ததாகக் கூறப் பட்டது. ஆனால், தேசிய குழுவின் மூத்த வீரர்களில் பலர் சுந்தரம் மற்றும் ஃபாண்டிக்கு ஆதரவாகக் கருத்துரைத்ததால் எஃப்ஏஎஸ் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இறுதிப் போட்டியில் அட்லெட்டிகோ

இறுதிப் போட்டியில் அட்லெட்டிகோ

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழு தகுதி பெற்றுள்ளது. அண்மையில் சொந்த மண் ணில் பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்துக் கான முதல் சுற்றில் 1=0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ வென்றிருந்தது. இந்நிலையில், பயர்ன் மியூனிக் கின் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இரண்டாம் சுற்று ஆட்டம் நடைபெற்றது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இதில் 2=1 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிகோ தோல்வி அடைந்தது. ஒட்டுமொத்த கோல் எண் ணிக்கை 2=2 என்றபோதிலும் எதிரணியின் அரங்கில் கூடுதல் கோல் போட்டதன் அடிப்படையில் அட்லெட்டிகோ இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பணக்காரக் குழுக்களே ஆதிக்கம் செலுத்தும்: கிளோடியோ ரனியெரி

லெஸ்டர் சிட்டி நிர்வாகி கிளோடியோ ரனியெரி

லெஸ்டர்: அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பணக்காரக் குழுக்களே இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தும் என்று தாம் நம்புவதாக இப்பரு வத்துக்கான லீக் பட்டத்தை வென்றுள்ள லெஸ்டர் சிட்டியின் நிர்வாகி கிளோடியோ ரனியெரி கருத்துரைத்துள்ளார். “பெரிய அளவிலான பணம் இறைக்கப்படும்போது மிகுந்த வலிமைமிக்க குழுக்கள் உருவாக் கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இம்மாதிரியான வலிமைமிக்க குழுக்கள்தான் வெற்றி பெறுகின்றன. “அடுத்த பருவத்தில் மட்டு மின்றி, அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு இதே நிலைதான் ஏற்படும்,” என்றார் 64 வயது ரனியெரி.

குஜராத்தைத் திணறடித்த டெல்லி அணி

ராஜ்கோட்: ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வேரோடு சாய்த் துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மிகவும் பலம் வாய்ந்த இந்த இரு அணிகளான டெல்லி யும் குஜராத் அணியும் மோதிய போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற டெல்லி அணித் தலைவர் ஸாகீர் கான் முதலில் பந்து வீச முடிவு செய்தார். குஜராத்தின் முக்கிய பலமே அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் தான் எனக் கருதப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்மித்தும் (15) மெக்கல்லமும் (1) சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

Pages