You are here

வாழ்வும் வளமும்

சிங்கப்பூர் இலக்கியம் குறித்து மாலன் உரை

தமிழகத்தின் பிரபல பத்திரிகை யாளரும் எழுத்தாளருமான திரு மாலன் சிங்கப்பூர் தமிழ் இலக் கியத்தின் தனிக்குரல்கள் பற்றி வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு பேசுவார். லீ கோங் சியான் ஆய்வாளரான மாலன் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். “தனிக் குரல்கள்: மாறுபட்ட சிந்தனை களை முன்வைக்கும் தமிழ்ப் படைப்புகள் மீதான பார்வையும் அயல்மொழி படைப்புகள் பற்றிய குறிப்புகளும்” என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இன்று அனைத்துலக ஆயுர்வேத மாநாடு

இந்திய அரசாங்கம், சிங்கப்பூருக் கான இந்திய தூதரகம், ஆயுர் வேத மருத்துவர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இரண் டாம் அனைத்துலக ஆயுர்வேத மாநாட்டை இன்று நடத்தவுள்ளன. ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்தியாவில் கடந்த சுமார் 2,000 ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சை முறையை மேற் கொண்டு பல நோய்களை மருத் துவர்கள் குணப்படுத்தி உள்ள னர். இன்றும் இந்த சிகிச்சை முறை உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தீர்மானங்களுடன் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

உலகமெங்கும் வாழும் தமிழ் எழுத் தாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு அமைந்தது. இம்மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட மாநாட்டில் சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்தி ரேலியா, கனடா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் சார்பில் முனைவர் சுப. திண்ணப்பன், திரு. பொன். சுந்தரராசு, திரு. நா. ஆண்டியப்பன், முனைவர் சீதாலட்சுமி, முனைவர் கோட்டி திருமுருகானந்தம், ஆசி ரியர்களான திரு விக்டர், திரு. வீர. கணேசன், திருமதி கிருத்திகா, முனைவர் தேன்மொழி, திரு. எஸ்.என்.வி.

பெருநாளுக்காக களைகட்டும் கேலாங் சந்தை

படம்: நிலா கோவிந்தராஜு

அனன்யா ரவிச்சந்திரன்

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கேலாங் சந்தையில் இறால் வடை விற்று வரும் திருமதி ஜமுனா ராணியுடைய வாழ்வாதாரமே வடை விற்பனைதான். நான்கு பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறு வயதிலிருந்தே தன்னுடைய தாயாருக்கு வடை விற்பனையில் உதவ ஆரம்பித்து ‘பசார் மாளம்’ களிலும், மற்ற சந்தைகளிலும் உளுந்து வடை, பருப்பு வடை என வித விதமான வடைகளை விற்று வருகிறார். வர்த்தகம் மந்தமாக இருந்த காரணத்தாலும் அவருடைய வியா பாரத்தில் அவருக்குத் துணையாக இருந்த கணவரின் மறைவாலும் அவர் சிறிது காலத்திற்கு வடை விற்பனையைத் தாற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.

மருதாணி உள்ளிட்ட அலங்கார சேவைகள்

திருமதி பிரியா

கேலாங் சந்தையில் அலங்கார சேவைகளும் வழங்கப்படுகின்றன. திருமதி பிரியா, 30, கடந்த ஐந்து ஆண்டுகளாக மருதாணி இடும் சேவைகளை இங்கு வழங்கி வருகிறார். வழக்கமாக ஒரு சிறு இடத்தில் வழங்கிய இந்த சேவையைக் கடந்த ஆண்டுகளில் மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றதால் இந்த ஆண்டு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து வியாபாரத்தை நடத்திவருகிறார். ‘இணை செலூப்’ என்ற புதிய வகையான நகங்களுக்கான மருதாணி இவருடைய கடையில் விற்கப்படுவதாலும் வாடிக்கையாளர்கள் அதை அதிகம் வாங்குவதாலும் வியாபாரம் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது என்று கூறினார் அவர்.

உள்ளூர் படைப்புகளை மொழிபெயர்க்க அழைப்பு

பல்லினக் கலாசாரம் மிகுந்துள்ள சிங்கப்பூரில் பிற இனத்தவரது கலாசாரங்களைப் புரிந்துகொள்ள அவர்களது படைப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவற்றைப் புரிந்துகொள்வ தற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலம், மாண்டரின், மலாய் போன்ற மொழிகளில் இருக்கும் உள்ளூர் படைப்பாளிகளின் கவிதைகள், சிறுகதைகள், நாவல், நாடகம், அறிவியல் புனைவுகள் போன்ற பல்வேறு படைப்புகளை மேற் கூறிய நான்கு மொழிகளுக்குள் ஏதாவதொன்றில் மொழிபெயர்த்து உங்களது படைப்புகளை அனுப்ப லாம். செப்டம்பர் மாதம் ‘மொழி பெயர்ப்பு மாத’மாகக் கொண்டா டப்பட உள்ளது.

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்

உலகம் முழுவதும் 100க்கு அதிகமான நாடுகளில் உள்ள கணினிகளை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் ‘வானாகிரை’ வைரஸ் தாக்குதலிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு ஒன்றை பிரெஞ்சு பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான், இந்தோனீசியா, தைவான் உள் ளிட்ட சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 300,000 கணினிகள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கணினித் தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கிய கணினிகளில் உள்ள தகவல் களைப் பயன்படுத்த இயலாதபடி ‘லாக்’ செய்துவிடும்.

சிங்கையின் பிரபல நடனக் கலைஞர் மணிமாறன் காலமானார்

படம்: வசந்தம்

மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற தமிழகத்தின் கிராமிய நடனங் களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து அவற்றுக்கு ஒரு தனி இடத்தை இங்கு பெற்றுத் தந்த பிரபல உள்ளூர் நடனக் கலைஞர், நடன ஆசிரியர் திரு மணிமாறன் துரைசாமி நேற்று தமிழகத்தில் காலமானார். அவருக்கு வயது 55. ஐந்து நண்பர்களோடு 'மணி மாறன் கிரியேஷன்ஸ்' நடனக் குழுவைக் கடந்த 1979ஆம் ஆண்டில் தொடங்கிய அவர், பல மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சி களுக்கு நடனங்களை அமைத்து சிங்கப்பூர் நடனத் துறையில் முத்திரையைப் பதித்துள்ளார்.

மன அழுத்தம் தொடர்பில் விழிப்புணர்வு உரை

படம்: தெம்பனிஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணி செயற்குழு

உலக அளவில் சுமார் 300 மில்லியன் மக்கள் மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண் மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் 2005 முதல் 2015க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 18% உயர்ந்துள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகா தார நாளாக கடைப்பிடிக்கப்படு கிறது. இவ்வாண்டு மன அழுத்தத் திலிருந்து விடுபடுவது பற்றிய அறிவுறுத்தல்களை முக்கிய பிர சாரமாக அந்நிறுவனம் முன்வைத் துள்ளது.

Pages