You are here

வாழ்வும் வளமும்

‘என் சிறுகதை அனுபவங்கள்’

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து படைக்கும் மே மாத கதைக்களம் இன்று மாலை 4.00 மணிக்கு 21 கிளவ் செஸ்டர் சாலையில் (GLOU CESTER ROAD) அமைந்துள்ள பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறுகிறது. கதைக்களத்தில் வள்ளல் திரு. ஜோதி மாணிக்கம் அவர்கள் “என் சிறுகதை அனுபவங்கள்!” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். மே மாதக் கதைக்களத்திற்குக் கதைகளும் விமர்சனங்களும் வந் துள்ளன என்று எழுத்தாளர் கழகம் தெரிவித்தது. மேலும் ஜூன் மாதக் கதைக்களம் போட் டிக்கு கதைகளும் கதை விமர் சனங்களும் வரவேற்கப்படு கின்றன என்றும் அது கூறியது.

இந்த வார தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்

ஞாயிற்றுக்கிழமை  நிகழ்ச்சி: பொன்னியின் செல்வன் நேரம்: மாலை 6 மணி, இடம்: எஸ்பிளனேட் அரங்கம் நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் நிலையங்களில் வாங்கலாம்.  நிகழ்ச்சி: தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் நேரம்: காலை 9 மணி, இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்  நிகழ்ச்சி: கவிமாலை – செந்தமிழ்ச் செல்வர் வை. திருநாவுக்கரசு புகழ்போற்றும் விழா. தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியரும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி பண் பாட்டுக் கழகம் போன்ற பல அமைப்புகளில் தலைவராக பல பணிகளை ஆற்றியவருமான சமூகத் தலைவர் அமரர் வை. தி. அரசு பற்றிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

மலபார் கோல்டு அறிவித்த நூறு தங்க நாணயங்களை வென்ற அதிர்ஷ்டசாலி

மலபார் கோல்ட் அண்ட் டைமண் ட்ஸ் நிறுவனம் அறிவித்த நூறு தங்க நாணய வெகுமதியை இந் தியாவின் திரு சாத்தையா (படம்) வென்றுள்ளார். மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத் தின் வட்டாரத் தலைவர் உவைசி அவருக்குத் தங்க நாணயங்களை வழங்கினார். ஆயிரம் வெள்ளிக்கு மேல் தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் அதிர்ஷ்ட சீட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு நூறு தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஆயிரம் வெள்ளிக்கு மேல் மதிப் புள்ள வைர நகைகளை வாங்கிய வர்களுக்கும் ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.

செல்வ வளம் தரும் அட்சய திருதியை

அட்சய திருதியை நாளில் ஏழை, எளியோருக்குத் தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பன் மடங்காகப் பெருகி நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘அட்சய’ என்ற சொல் லுக்கு அழிவின்றி வளர்வது என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் குறைவின்றி வாழ லாம் என்பது முன்னோர் வாக்கு. அட்சய திருதியைக்குத் தங்கம்தான் வாங்கவேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், பச்சரிசி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏழைகளுக் குத் தானம் அளிக்கலாம்.

முத்தமிழ் விழாவில் தமிழறிஞர் மணவை முஸ்தாபாவின் புதல்வர்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் முத்தமிழ் விழாவை இவ்வாண்டும் தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழா நடைபெறும். தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தமிழ் மொழி விழா வின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெறும். கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந் தினராகக் கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் மாம்பழத் திருவிழா

திமத்தி டேவிட்

சிங்கப்பூர் இந்திய திருவிழா இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறையாக நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கவுள்ள விற்பனை விழாவில் இந்த ஆண்டு முதல் முறையாக மாம்பழத் திருவிழா இடம்பெற உள்ளது. இதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான மாம்பழங்கள் வரவ ழைக்கப்பட உள்ளன. வெவ்வேறு சுவைகளைக் கொண்ட விதவித மான மாம்பழங்களைச் சுவைக்க ‘லியோஸ் கிலான்ஸின் மேங்கோ வில்லேஜ்’ பக்கம் வரலாம். அல்ஃபோன்சோ, கேசர், பாயரி, லால் பாக், பாடாமி, தோடாபுரி, நீலம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை கண்காட்சியில் வாங்கி ருசிக்க லாம்.

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - ஒரு தொல்லியல் பார்வை

தொல்லியல் ஆய்வாளரான பேராசிரியர் முனைவர் கா. ராஜன்

அஷ்வினி செல்வராஜ்

தமிழ் வரிவடிவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியும் அக்காலத்து தமிழர்கள் வணிகம், அறிவியல், வாழ்வியல் ஆகிய வற்றில் அடைந்திருந்த பிரமிக் கத்தக்க முன்னேற்றத்தையும் மையப்படுத்தும் வகையில் அமைந்தது ‘தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்; ஒரு தொல்லியல் பார்வை’ என்ற நிகழ்ச்சி. வளர்தமிழ் இயக்கம், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தேறிய நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குக் கட்டுரை அனுப்பும் தேதி இம்மாத இறுதிவரை நீட்டிப்பு

சென்னையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் மாநாட்டு மலருக்கும் கட்டுரை அனுப்புவதற்கான தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன் அந்தத் தேதி 15.04.2017 என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரும் ஜூன் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Pages