தைவான் அருகே சீன போர்க்கப்பல்கள், ராணுவ விமானம்

தைவான் அருகே போர்க்கப்­பல்­களை­யும் விமா­னங்­க­ளை­யும் சீனா மீண்­டும் நேற்று அனுப்­பி­யது. கலி­ஃபோர்­னி­யா­வில் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் கெவின் மெக்­கார்த்­தியை தைவா­னிய அதி­பர் சாய் இங்­வென் சந்­தித்த பிறகு சீனா இச்­செ­ய­லில் இறங்­கி­யது.

தைவான் தீவின் அரு­கி­லுள்ள கடற்­ப­ரப்­பில் மூன்று சீன போர்க்­கப்­பல்­கள் குறுக்­கிட்­ட­தா­க­வும் தைவா­னிய ஆகாய தற்­காப்பு எல்லை வழி­யாக சீனா­வின் ராணுவ விமா­ன­மும் நீர்­மூழ்கி எதிர்ப்பு ஹெலி­காப்­ட­ரும் ஊடு­ரு­வி­ய­தா­க­வும் தைவா­னின் தேசிய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

தைவா­னைக் குறிவைத்து போர்க்­கப்­பல்­களை சீனா அனுப்பி இருப்­பது இந்த வாரத்­தில் இது இரண்­டா­வது முறை. கடந்த புதன்­கி­ழமை விமா­னந்­தாங்­கிக் கப்­பல் ஒன்று தைவா­னின் தென்­கி­ழக்­குக் கடற்­ப­கு­தி­யைக் கடந்து மேற்­கத்­திய பசி­பிக் வட்­டா­ரத்­திற்குச் சென்­றது.

லாஸ் ஏஞ்­ச­லி­ஸில் திரு­வாட்டி சாயும் திரு மெக்­கார்த்­தி­யும் சந்­திப்­ப­தற்­குச் சற்று நேரம் முன்­னால் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

இந்­நி­லை­யில், சீனா­வின் பிரிக்­க­மு­டி­யாத அங்­கம் தைவான் என்று பெய்­ஜிங் நேற்று தெரி­வித்­தது.

இதற்கிடையே, தைவா­னுக்கு எவ்­வ­ளவு சீக்­கி­ரம் ஆயு­தங்­களை அனுப்ப முடி­யுமோ அந்த அள­வுக்கு விரை­வாக ஏற்­பாடு செய்து வரு­வ­தாக மூத்த அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் நேற்று கூறி­னார். அமெ­ரிக்­கா­வின் அனு­ம­தி­யோடு பிற நாடு­களும் தைவா­னுக்கு ஆயு­தங்­களை விற்­க­லாம் என்­றும் அவர் பரிந்­து­ரைத்­தார்.

ஏவு­க­ணையை எதிர்த்து முறி­ய­டிக்­கும் ஆயு­தம் உள்­ளிட்ட தனக்­குத் தேவைப்­படும் அமெ­ரிக்க ஆயு­தங்­களை விநி­யோ­கிப்­ப­தில் தாம­தம் காட்­டப்­ப­டு­வ­தாக கடந்த ஆண்­டு­மு­தல் தைவான் கூறி வரு­கிறது.

அதற்­குப் பதி­ல­ளிக்­கும் வித­மாக அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்­தின் வெளி­யு­ற­வுக் குழுத் தலை­வர் மைக்­கல் மெக்­கால் கூறு­கை­யில், “சீனா­வி­ட­மி­ருந்து அச்­சு­றுத்­தலை எதிர்­நோக்­கும் தைவா­னுக்கு ஆயு­தங்­கள் உட­ன­டி­யா­கத் தேவை,” என்­றார்.

தைவா­ன் நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றிய அவர், “ஆயுத விநி­யோ­கத்­திற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டு­விட்­டது. விரை­வான விநி­யோ­கத்­திற்கு எங்­க­ளது அதி­கா­ரத்­துக்­குட்­பட்ட அனைத்­தை­யும் செய்து வரு­கி­றோம்,” என்­றார்.

இந்நிலையில், அமெ­ரிக்­கா­வுக்­கான தைவா­னிய தூதர் திரு­வாட்டி சியாவ் பி-கிம் மீது மேலும் சில தடை­களை சீனா விதித்­துள்­ளது. அவரோ அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­களோ சீனா, ஹாங்­காங் மற்­றும் மக்­காவ் தீவுக்­குள் நுழை­யக்­கூ­டாது என சீனா­வுக்­கான தைவா­னிய விவ­கார அலு­வ­ல­கம் தடை விதித்­துள்­ள­தாக தைவான் அர­சாங்க ஊட­கம் நேற்று கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!