பசுமைப் பொருளியல் துறை வேலைக்கு அதிக தேவை

கரிம சேவை­க­ளுக்­கான மைய­மாக உரு­வெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களில் சிங்­கப்­பூர் ஈடு­பட்டு வரும் வேளை­யில் பசு­மைப் பொரு­ளி­யல் துறை­யில் வேலை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது.

கரி­மக் குறைப்பில் ஈடு­பட்­டி­ருக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் கரி­ம ஒழிப்புக்கான உத்­தி­க­ளுக்­கும் உதவ இந்த வேலை­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இந்­தத் துறை­யில் குறிப்­பிட்ட சில வேலை­களில் வெளி­நாட்­டி­னரை அமர்த்த விரும்­பும் நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய நடை­முறை கைகொ­டுக்­கும்.

செப்­டம்­பர் 1 முதல் புள்­ளி­கள் அடிப்­ப­டை­யி­லான எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் கட்­ட­மைப்பு அறி­மு­கம் கண்ட பின்­னர் அவர்­களை வேலைக்கு எடுப்­ப­தில் பசு­மைப் பொரு­ளி­யல் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு சிர­மம் இருக்­காது.

எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் பெறு­வ­தற்­கான படிப்­புத் தகுதி, சம்­பள வரம்பு ஆகி­ய­வற்­றோடு நான்கு வித­மான வேலை­க­ளுக்­குக் கூடு­தல் புள்­ளி­கள் வழங்­கப்­படும்.

கரிம பொருள் சரி­பார்ப்­ப­வர் மற்­றும் சிறப்­புத் தணிக்­கை­யா­ளர், கரிம விற்­ப­னை­யா­ளர், கரிம திட்ட மேலா­ளர், கரி­மத் தரப் பகுப்­பாய்­வா­ளர் ஆகிய வேலை­கள் அவை.

சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்­பம், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உள்­ளிட்ட துறை­களில் திறன் பற்­றாக்­குறை நில­வும் 27 வித­மான வேலை­களுக்குரிய எம்­பி­ளாய்­மண்ட் பாஸுக்கு ஊக்­கப்­புள்­ளி­கள் வழங்­கும் திட்­டம் அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது. அந்த 27 வேலை­களில் மேலே சொன்ன நான்கு வேலை­களும் அடங்­கும்.

இதன் தொடர்­பாக குறைந்­த­பட்­சம் 12 வித­மான வேலை­கள் ‘மைக­ரி­யர்ஸ்­ஃபி­யூச்­சர்’, ‘லிங்­கிட்­இன்’ போன்ற தளங்­களில் கண்­ட­தாக ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரி­வித்­தது. இவற்­றில் பெரும்­பா­லா­னவை கரிம தணிக்கை தொடர்­பா­னவை.

சுற்­றுச்­சூ­ழல் தணிக்கை நிறு­வ­ன­மான TUV SUD, எரி­பொ­ருள் பெரு­நி­று­வ­ன­மான BP மற்­றும் வெவ்­வேறு வேலை நிய­மன முக­வை­கள் இந்த வேலை­களை விளம்­ப­ரப்­ப­டுத்தி இருந்­தன.

கூடு­தல் புள்­ளி­களை ஈர்க்­கும் நான்கு வேலை­கள், நிறு­வ­னங்­க­ளுக்­கான உத்­தி­களை வகுக்­க­வும் கரிம ஒழிப்பு உத்­தி­களை அமல்­ப­டுத்­த­வும் உத­வக்­கூ­டி­யவை என்று கேபி­எம்ஜி நிறு­வ­னத்­தின் பங்­கா­ளி­யும் இஎஸ்ஜி பிரி­வின் தலை­வ­ரு­மான ஷரத் சோமானி கூறி­னார்.

“உதா­ர­ணத்­திற்கு, கரிம தரப் பகுப்­பாய்­வா­ளர் கரிம பயன்­பாட்­டைக் குறைப்­ப­தில் ஈடு­படும் நிறு­வ­னங்­க­ளுக்கு அறி­வி­யல் சார்ந்த இலக்­கு­களை வகுக்க உத­வு­வார்.

“அதே­நே­ரம், அந்த இலக்­கு­களை எட்­டு­வ­தற்­கான திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த கரிம திட்ட மேலா­ளர் கைகொடுப்­பார்.

“கரிம வெளி­யேற்­றத்­திற்கு ஈடாக கரிம சலு­கை­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­களுக்கு கரிம விற்­ப­னை­யா­ளர் உத­வு­வார்.

“அதே­போல, ஒரு நிறு­வ­னம் கரிம வெளி­யேற்­றத்தை எந்த அள­வுக்கு சிறப்­பான முறை­யில் குறைக்­க­லாம் என்­ப­தற்­கான வழி­வ­கை­களை கரிம பொருள் சரி­பார்ப்பு மற்­றும் சிறப்­புத் தணிக்­கை­யா­ளர் வகுத்­துத் தரு­வார்,” என்று திரு ஷரத் விளக்­கி­னார்.

கரி­ம சேவை மைய­மாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுக்­கும்­போது இந்த வேலை­கள் மிக அவ­சி­ய­மா­ன­வை­யாக மாறி­வி­டும் என்­றார் அவர்.

கரி­ம­நீக்­கத் துறை என்­பது US$10 டிரில்­லி­யன் (S$13.3 டிரில்­லி­யன்) மதிப்­புள்ள சந்தை என்று கேபி­எம்ஜி மதிப்­பி­டு­கிறது.

‘சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம்’ வழி­யாக கரிம சேவை­க­ளுக்­கான சுற்­றுச்­சூ­ழல் முறையை வகுக்க நாடு இலக்கு கொண்­டுள்­ள­தா­கக் கூறிய திரு ஷரத், இத்­துறை தொடர்­பான 50,000 புதிய வேலை­கள் 2030ஆம் ஆண்­டுக்­குள் உரு­வாக்­கப்­பட லாம் என்­றார்.

பசு­மைப் பொரு­ளி­யல் சந்தை அனு­கூ­லங்­க­ளைப் பெற போட்­டி­யி­டும் நாடு­க­ளுக்கு நிக­ராக, உள்­ளூர் திற­னா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தும் வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­களை ஈர்ப்­ப­தும் சிங்­கப்­பூ­ருக்கு அவ­சி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

இது புதிய துறை என்­ப­தால் வேலை தேடும் பல­ருக்கு பசு­மைப் பணி­கள் பற்­றித் தெரிந்­தி­ருக்­கவோ தாம் அதற்­குத் தகு­தி­யா­ன­வரா எனத் தெரிந்­தி­ருக்­கவோ வாய்ப்­பில்லை என்று ‘ராண்ட்ஸ்­டேட்’ ஆள்­நி­ய­மன நிறு­வ­னத்­தின் ஆசிய பசி­பிக் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி ஜெயா தாஸ் கூறி­னார்.

கரிம சேவைகளுக்கான மையமாக உருவெடுக்கும் சிங்கப்பூர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!