ஆளுநருக்கு எதிராக பொங்கி எழுந்த கட்சிகள்; அடுத்த வாரம் ஒன்றுசேர்ந்து போராட்டம்

தமிழ்­நாட்­டின் ஆளு­நர் ஆர்.என்.ரவி சர்ச்­சை­யைக் கிளப்­பும் வகை­யில் வெளி­யிட்­டி­ருக்­கும் கருத்து­களால் தமி­ழக அர­சி­யல் களம் சூடாகி வரு­கிறது. அவ­ருக்­குக் கண்­ட­னம் தெரி­விக்­கும் வகை­யில் ஆளும் கட்­சி­யான திமு­க­வும் அதன் தோழ­மைக் கட்­சி­களும் போராட்­டத்தை அறி­வித்­துள்­ளன.

வரும் 12ஆம் தேதி புதன்­கிழமை மாலை ஆளு­நர் மாளிகை முன்பு கண்­ட­னப் போராட்­டம் நடை­பெ­றும் என்று அவை நேற்று தெரி­வித்­தன.

ஆளு­நர் ரவி நேற்று முன்­தினம் கிண்­டி­யில் உள்ள ஆளு­நர் மாளி­கை­யில், இந்­தி­யக் குடி­மைப்­பணி தேர்­வு­க­ளுக்­குத் தயா­ரா­கும் மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி­னார். அப்­போது பேசிய அவர், ஆளு­நர் கிடப்­பில் வைத்­துள்ள மசோ­தாக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவே அர்த்­தம் என்று குறிப்­பிட்­டார்.

மேலும் ஒரு சர்ச்­சைக் கருத்­தாக அவர் கூறு­கை­யில், “ஸ்டெர்­லைட் ஆலை நாட்­டின் 40% காப்­பர் (தாமிர) தேவை­யைப் பூர்த்தி செய்­தது. வெளி­நாட்டு நிதி­யு­த­வி­யு­டன் மக்­க­ளைத் தூண்­டி­விட்டு அதனை மூடி­விட்­ட­னர்,” என்று தெரி­வித்­தார்.

அவ­ரின் இந்­தக் கருத்து தமி­ழக அர­சி­யல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. திமுக, அதி­முக, காங்­கி­ரஸ், மதி­முக, கம்­யூ­னிஸ்ட் என தமி­ழ­கத்­தின் பெரிய கட்­சி­கள் அனைத்­தும் ஆளு­ந­ருக்­குக் கண்­ட­னம் தெரி­வித்து வரு­கின்­றன.

ஆளு­ந­ரைக் கண்­டித்து முதல்­வர் மு.க.ஸ்டா­லின் காட்­ட­மான அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

“ஆளு­நர் ஆர்.என்.ரவி தெரி­வித்­துள்ள கருத்து, அவர் வகிக்­கும் பத­விக்கு அழ­கல்ல. அவர் பேசிய இடம் முறை­யான இட­மும் அல்ல. மாநில அர­சின் சுருக்­கெ­ழுத்­து­தான் ஆளு­நர் என்று உச்ச நீதி­மன்­றம் அளித்த ஒரு வழக்­கின் தீர்ப்­பில் சொன்­னார்­கள். அதனை மறந்­து­விட்டு ‘தி கிரேட் டிக்­டேட்­ட­ராக’ ஆளு­நர் தம்மை நினைத்­துக்­கொள்ள வேண்­டாம்,” என்று அந்த அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் அவர் கூறு­கை­யில், “தனது கட­மை­களில் இருந்து தப்­பித்­தும் நழு­வி­யும் வரு­வதை ஆளு­நர் ரவி வழக்­க­மாக வைத்­ துள்­ளார். அதற்கு முறை­யான கார­ணத்­தை­யும் அர­சுக்­குத் தெரி­விப்­ப­தும் இல்லை. 14 கோப்­பு­கள் அவ­ரால் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன,” என்­றார்.

அதி­முக மூத்த தலை­வர் கேபி முனு­சாமி எம்­எல்ஏ கூறு­கை­யில், “தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலையை மக்­க­ளின் எதிர்ப்பு கார­ண­மாக, உணர்­வு­கள் கார­ண­மாக கடந்த அதி­முக அரசு மூடி­யது. ஆனால் ஸ்டெர்­லைட் ஆலை எதிர்ப்பு போராட்­டத்­துக்கு வெளி­நாட்­டுப் பணம் வந்­தது என ஆளு­நர் பத­வி­யில் இருக்­கும் ஒரு­வர் பொது­வெ­ளி­யில் கருத்து சொல்­வது அவ­ருக்கு அழகு அல்ல,” என்­றார்.

மதி­முக பொதுச் செய­லா­ளர் வைகோ வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கை­யில், “இன்­றைய ஆளு­நர் தமிழ்­நாட்­டின் சாபக்­கேடு. இவர் இந்த மாநி­லத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட வேண்­டும்,” எனத் தெரி­வித்­துள்­ளார்.

முன்­னாள் மத்­திய நிதி­ய­மைச்­சர் ப.சிதம்­ப­ரம் கூறு­கை­யில், “பாஜ­க­வால் நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நர்­கள் தங்­கள் அதி­கா­ரத்தை மீறி நடந்­து­கொள்­வ­தோடு ஜன­நா­ய­கத்­தை­யும் காலில் போட்டு மிதிக்­கின்­ற­னர்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!