சந்தர்ப்பவாத அரசியலுக்கு சிங்கப்பூரில் இடமில்லை

சிங்­கப்­பூ­ரில் அர­சி­யல் சந்­தர்ப்­ப­வா­தத்­திற்கு இட­மில்லை என்­பதை துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங்­கும் ஒரு­சே­ரத் தெரி­வித்து உள்­ள­னர்.

மக்­க­ளைக் கவ­ரும் அர­சி­யல் போக்­கிற்­கும் இங்கு இட­மில்லை என நாடா­ளு­மன்­றத்­தில் அதி­பர் உரை­மீ­தான ஐந்து நாள் விவா­தத்­திற்­குப் பிறகு இவ்­வி­ரு­வ­ரும் ஒப்­புக்­கொண்­ட­னர்.

இதற்கு முன்­னர், கடந்த திங்­கட்­கி­ழமை நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றிய திரு வோங், எதிர்க்­கட்­சி­யான பாட்­டா­ளிக் கட்சி அர­சாங்­கத்­தின் வரு­வாயை உயர்த்த பய­னுள்ள மாற்று யோச­னை­க­ளைத் தெரி­விக்க வேண்­டும் என்று தெரி­வித்து இருந்­தார்.

அதே­நே­ரம், அர­சாங்­கம் மீது மக்­கள் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கை­யைக் குறைக்­கும் வகை­யில், மக்­க­ளைக் கவ­ரும் விதத்­தில் யோச­னை­க­ளைத் தெரி­விப்­ப­தி­லும் சந்­தர்ப்­பா­வத அர­சி­யல் செய்­வ­தி­லும் அக்­கட்சி ஈடு­ப­டக்­கூ­டாது என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

அவ­ரது அந்­தக் கருத்­துக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் அல்­ஜுனிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­ன­ரு­மான பிரித்­தம் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பதி­ல­ளித்­துப் பேசி­னார்.

மக்­க­ளைக் கவ­ரும் வகை­யி­லும் உண்­மைக்கு மாறான நிலை­யி­லும் பாட்­டா­ளிக் கட்சி செயல்­பட்­டி­ருந்­தால் அதன் மாற்று யோச­னை­கள் சில­வற்றை அர­சாங்­கம் பரி­சீ­லித்­தி­ருக்­காது என்று திரு சிங் கூறி­னார்.

உதா­ர­ண­மாக, பார­பட்­சத்­திற்கு எதி­ரான சட்ட மசோதா, குறைந்­த­பட்ச ஊதி­யம் மற்­றும் காப்­பீடு தொடர்­பான பாட்­டா­ளிக் கட்­சி­யின் மாற்று யோச­னை­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

அப்­போது பேசிய திரு வோங், பாட்­டா­ளிக் கட்­சி­யின் யோச­னை­கள் வகைப்­ப­டுத்­தும் விதத்தை தானோ திரு சிங்கோ ஏற்­றுக்­கொள்­கி­றோமா இல்­லையா என்­ப­தைத் தெரி­விக்க வேண்டி வர­லாம் என்­றார்.

மேலும், சிங்­கப்­பூ­ரில் ஜன­நா­ய­கம் உரு­வெ­டுத்த விதம் குறித்து திரு வோங் விரி­வாக எடுத்­து­ரைத்­தார். அதே­நே­ரம் முன்­னே­றிய ஜன­நா­யக நாடு­களில்­கூட பிளவு ஏற்­பட்­டது குறித்து தாம் வருந்­து­வ­தா­க­வும் திரு வோங் கூறி­னார்.

“பல நாடு­களில் மக்­க­ளைக் கவ­ரும் அறி­விப்­பு­களே அடிப்­படை­யாக உள்­ளன. அதே­நே­ரம் அந்­தப் போக்கு அந்­நா­டு­க­ளின் சமூ­கங்­களை வெகு­வா­கப் பாதித்­தி­ருப்­ப­தை­யும் இரு­வேறு கருத்­து­க­ளால் சமூ­கங்­கள் பிளவு­பட்­டி­ருப்­ப­தை­யும் நீங்­கள் அறி­யக்­கூ­டும்.

“மக்­க­ளைக் கவர்­வது என்­பது உண்­மை­யைச் சிதைத்து அர­சி­யல் லாபம் பெறக்­கூ­டி­யது. இந்­தப் போக்கு நீடித்­தால் சிங்­கப்­பூரை அது பாதிக்­கும்,” என்று திரு வோங் விளக்­கி­னார்.

கொள்­கை­களை வகுக்­கும்­போது மக்­க­ளைக் கவர்­வ­தில் கவ­னம் செலுத்­து­வ­தைக் காட்­டி­லும் நேர்­மை­யை­யும் ஒரு­மைப்­பாட்­டை­யும் கடைப்­பி­டிப்­ப­தில் அர­சாங்­கம் கவ­னம் செலுத்­தும் என்­றும் துணைப் பிர­த­மர் வோங் கூறினார்.

“இந்­தத் தர­நி­லை­களை அர­சாங்­கம் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­னால் அது குறித்து கேள்வி எழுப்ப எதிர்த்­த­ரப்­புக்கு வாய்ப்பு கிடைக்­கும்.

“அதே­போல, எதிர்க்­கட்சி தெரி­விக்­கும் யோச­னை­களும் கொள்­கை­களும் மக்­க­ளைக் கவர்ந்­தி­ழுக்­கும் வகை­யில் இருந்­தால் அது குறித்து அர­சாங்­கம் கவ­லை­கொள்­ளும்,” என்­றார் திரு வோங்.

நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெற்­றுள்ள ஆளும் தரப்­பும் எதிர்த்­த­ரப்­பும் முதிர்ச்­சி­யான ஜன­நா­ய­கத்­தைக் கட்­டிக்­காக்க வேண்­டும். இதனை மட்­டுமே நாம் விரும்ப வேண்­டும். அதே­நே­ரம் ஜன­ரஞ்­ச­கப் போக்­கும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லும் சிங்­கப்­பூ­ரி­லும் இந்த மன்­றத்­தி­லும் வேரூன்­று­வதை எதிர்ப்­போம்,” என்று திரு வோங் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­னார்.

அவ­ரது கருத்தை ஏற்­றுக்­கொண்ட திரு சிங், “எதிர்க்­கட்­சி­யான பாட்­டா­ளிக் கட்சி மக்­கள்­மீது அக்­கறை கொண்­டி­ருப்­ப­தைத் தொட­ரும் என்­பதோடு சிங்­கப்­பூ­ரின், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­கா­கப் பாடு­படும்,” என்று கூறினார்.

“அர­சாங்­கம் மீது மக்­கள் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கை­யைக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக குறைக்­கும் வகை­யில் பாட்­டா­ளிக் கட்சி சந்­தர்ப்­பவாத அர­சி­யல் நடத்­து­வ­தா­கக் குறை­கூ­ற­வும் அந்­தக் கட்­சி­யைத் தாக்­க­வும் அதி­பர் உரை மீதான தமது விவா­தத்தை திரு வோங் பயன்­ப­டுத்­து­வார் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. இது ஒரு நியா­ய­மற்ற குற்­றச்­சாட்டு. கருத்­து­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் தெரி­விக்­கும் முக்­கிய தள­மாக நமது நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் இருப்­பதை இந்­தக் குற்­றச்­சாட்டு பாதிக்­கும்,” என்றும் திரு சிங் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த குரல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!