கரிமக் கழிவு இல்லா இலக்கு

உயிர்எரிபொருளில் அதிக கவனம்

எதிர்­வ­ரும் 2050ஆம் ஆண்­டுக்­குள் கரி­மக் கழிவு இல்லா இலக்கை அடைய சிங்­கப்­பூர் பல வழி­களில் செயல்­பட்டு வரு­கிறது. கரி­மக் கழிவு அதி­கம் இருக்­கும் மின்­சார உற்­பத்தி, போக்­கு­வ­ரத்து, கன­ரக தொழிற்­சாலை போன்ற துறை­களில் உயி­ர்எரி­பொ­ருள், நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய உயி­ரி­யல் வளங்­களை அதி­கம் பயன்­ப­டுத்­தும் சாத்­தி­யத்தை அர­சாங்­கம் பரி­சீலித்து வரு­கிறது.

இதற்­காக, வர்த்­தக, தொழில் அமைச்­சும் தேசிய பரு­வ­நிலை மாற்ற செய­ல­க­மும் இணைந்து உயி­ர்எரி­பொ­ருள், உண­வுக் கழிவு, விலங்­குக் கொழுப்பு போன்ற மற்ற புதுப்­பிக்­கத்­தக்க வளங்­களை உள்­ளூ­ரிலோ, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தோ பெறும் சாத்­தி­யக்­கூறு பற்றி பரி­சீ­லிக்க ஒப்­பந்­தப்­புள்­ளி­யைக் கோரி­யுள்­ளன.

இது கரி­மக் கழிவு அற்ற நிலையை சிங்­கப்­பூர் விரை­வாக எட்­டும் வகை­யில், பல வழிகளில் உயி­ர்எரி­பொ­ருள் பெறு­வதை சாத்­தி­ய­மாக்­க­லாம்.

இதில், சிங்­கப்­பூர் ஏற்­கெனவே ஓர­ளவு சாதனை புரிந்­துள்­ளது. அதன்­படி, 2022ஆம் ஆண்டு முடிய பெருங்­க­டல் பய­ணங்­கள் மேற்­கொள்­ளும் கப்­பல்­க­ளுக்கு 70,000 டன் அளவு உயி­ர்எரி­பொ­ருள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­ன­மும் தனது அனைத்து விமா­னப் பய­ணங்­களுக்­கும் சமை­யல் எண்­ணெய், விலங்­குக் கொழுப்­புக் கலவை யிலிருந்து பெறும் விமான எரி பொருளை பயன்­ப­டுத்­து­கிறது.

உயி­ரி­யல் வளங்­கள் என்­பவை வேளாண், உணவு, செம்­பனை எண்­ணெய், வனக் கழிவு கள் போன்ற புதுப்­பிக்­கத்­தக்க, மக்­கும் தன்­மை­கொண்ட மனித அல்­லது விலங்­கு­க­ளின் செயல்­பா­டு­க­ளி­லி­ருந்து பெறப்படும் மூலப்­பொ­ருள்­க­ளா­கும்.

உயி­ர்எரி­பொ­ருள் என்­பது பயோ­மித்­தேன், பயோ­டீ­சல், போன்ற உயிர்ப் பொருள்­களில் இருந்து பெறப்­ப­டு­ப­வை­யா­கும்.

பயோ­மித்­தேனை உற்­பத்தி செய்ய பயோ­கேஸ் என்ற உயிர் எரி­பொ­ருளை சுத்­தி­க­ரித்து, அதி­லுள்ள கரி­ய­மில வாயு­வை­யும் மற்ற அசுத்­தங்­க­ளை­யும் அகற்ற வேண்­டும். இயற்கை எரி­வா­யுக்­குப் பதில் இந்த பயோ­மித்­தேனை பயன்­ப­டுத்­த­லாம் என்று தேசிய பல்­க­லைக்­க­ழக ரசா­யன, உயி­ர­ணுப் பொறி­யி­யல் துறை பேரா­சி­ரி­யர் டோங் யென் வா கூறி­னார்.

இந்த ஆய்­வின் ஒரு பகு­தி­யாக, பயோ­மித்­தேனை குழாய் வழி­யாக இயற்கை எரி­வா­யுக்­குப் பதி­லாக புகுத்­து­வது குறித்­தும் இதை முறைப்­ப­டுத்த தொழில்­நுட்­பத் தர­நி­லை­களை வகுப்­பது குறித்­தும் அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

வரும் 2025 முதல், துவாஸ் நெக்­ஸஸ் ஒருங்­கி­ணைந்த கழிவு நிர்­வாக வசதி, உண­வுக் கழி­வு­களை சுத்­தி­க­ரித்து, பயன்­ப­டுத்­திய தண்­ணீ­ரைக் கொண்டு பயோ­காஸ் தயா­ரிக்­கும். இதன்­வழி, இந்த வச­தி­யைச் செயல்­ப­டுத்த மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­யும். இதில் கிடைக்­கும் கூடு­தல் மின்­சா­ரத்தை மற்ற தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றார் பேரா­சி­ரி­யர் டோங்.

மரக்­கி­ளை­கள், இலை­கள், புல் போன்­ற­வை­யும்

கரையோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளி­லும் ஜூரோங் தீவி­லும் உள்ள எரி­சக்தி உற்­பத்­தி­யில் பயன்­படுத்­தப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!