மீண்ட கொண்டாட்டமும் ஒன்றுகூடலும்

அனுஷா செல்­வ­மணி

பள்­ளி­வா­சல்­களில் தொழுகை, உற்­றார் உற­வி­னர்­க­ளு­டன் சந்­திப்பு என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் நேற்று நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டாடி மகிழ்ந்­த­னர். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­னால் 2020­லி­ருந்து நடப்­பி­லி­ருந்த தொழு­கைக்கு முதல்­நாள் பதிவு செய்ய வேண்­டி­யது உள்­ளிட்ட பல­வித கட்­டுப்­பா­டு­கள் நீங்­கி­ய­தில் சிறு­வர்­கள் முதல் வெளி­நாட்டு ஊழி­யர்­கள்­வரை அனை­வ­ரும் நிம்­ம­தி­யோ­டும் மகிழ்ச்­சி­யு­ட­னும் காணப்­பட்­ட­னர்.

நாடெங்­கும் உள்ள பள்­ளி­வாசல்­கள், சிறப்பு தொழுகை இடங்­க­ளுக்­குச் சென்று ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தொழு­த­னர். இந்த ஆண்டு கிட்­டத்­தட்ட 240,000 தொழுகை இடங்­கள் வழங்­கப்­பட்­டதாக முயிஸ் எனப்­படும் இஸ்­லா­மிய சமய மன்­றம் தெரி­வித்­தது. 2022ல் இது 153,250 ஆக இருந்­தது. இதில், கிட்­டத்­தட்ட 230,000 இடங்­கள் 68 பள்ளி வாசல்­களில் இருந்­தன. கூடைப்­பந்து மைதா­னம் போன்ற வீட­மைப்­புப் பேட்­டை­க­ளி­லுள்ள பொது இடங்­களில் ஏறக்­கு­றைய 10,000 இடங்­கள் வழங்­கப்­பட்­டன.

அல்-முத்­தா­கின் பள்­ளி­வா­ச­லுக்கு தொழு­கைக்­குச் சென்ற முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சர் மச­கோஸ் சுல்­கிஃப்லி, அதிகமான தொழுகை இடங்­கள், எதிர்­பார்க்­கப்­பட்ட கூட்­டத்­தைச் சமா­ளிக்க உத­வி­ய­து­டன் முதி­யோர், வெளி­நாட்டு ஊழி­யர் என பல்­வேறு குழுக்­க­ளின் தேவை­களைப் பூர்த்தி செய்­ய­வும் உதவி­யாக இருந்­தது என்று கூறி­னார்.

தொழு­கைக் கூட்­டங்­கள் ஒழுங்கு­மு­றைப்­படி நடந்­தே­றின என்­றார் அவர்.

டன்­லப் ஸ்தி­ரீட் அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லில் நாள் முழு வ­தும் ஏறக்குறைய 2,500 முஸ்லிம்­கள் தொழு­கை­களில் பங்கேற்றனர்.

“முஸ்­லிம்­கள் புத்­து­ணர்ச்­சி­யுடன் மீண்டும் பள்­ளி­வா­சல்­களுக்கு வந்து தொழுகை செய்ய முடிந்தது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. கடந்த ஈராண்­டு­க­ளை­விட இவ்­வாண்டு 1,000க்கும் அதி­கமா னோர் வந்­துள்­ள­னர்,” என்றார் அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் மேலா­ளர் திரு முஹம்­மது இத்ரீஸ்.

அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த 45 ஆண்­டு­களாக செல்லும் வணி­கர் அப்­துல் ஷாஃபி, 62, “இந்த ஆண்டு முழு­மை­யான சுதந்­தி­ரத்­தோடு தொழுது நண்­பர்­க­ளைக் காண முடிந்­தது,” என பூரித்­தார்.

கிரு­மித்­தொற்றுச் சூழலில் குடும்­பத்­தி­ன­ரைப் பிரிந்து, தங்கு விடு­தி­களில் தொழுது வந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு பள்ளிவாசல் சென்று தொழுகை செய்து நண்பர்களைக் காண முடிந்ததில் மகிழ்ச்சி.

பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் பலர் நேற்று பிற்­ப­கலில் சிராங்­கூன் சாலை­, அங்­கூ­லியா பள்­ளி­வா­சல் அரு­கில் திரண்டிருந்தனர்.

கடந்த 17 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்றி வரும் முஹம்­மது அலி ஹொசைன், 54, “இந்­தாண்டு பெரு­நாள் எனக்கு இரட்­டிப்பு மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளது. கிரு­மித்­தொற்­றுக்­குப் பிறகு பள்­ளி­வா­ச­லுக்கு வந்து தொழு­ததுடன், என் இரு மகன்­களும் இப்­போது சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­வ­தால் குடும்­பத்­தோடு பெரு­நாள் கொண்­டா­டினேன்,” என்­றார்.

கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­யும் 38 வயது சுமோன், “இதற்கு முன்­னர் பள்­ளி­வா­ச­லுக்­குச் செல்ல முடி­யா­மல் நான் தங்­கும் பெஞ்­சூரு விடு­தி­யில் தொழுது வந்­தேன். நேற்று காலை எட்டு மணிக்கே பள்­ளி­வா­ச­லுக்கு வந்து என் நண்­பர்­க­ளைச் சந்­தித்து நிம்­ம­தி­யாக தொழு­தேன்,” என்று கூறி­னார்.

sanush@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!