வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைக்கோள்

சிங்­கப்­பூ­ரின் டெலி­யோஸ்-2 எனும் செயற்­கைக் கோளை ஏந்­திக்­கொண்டு நேற்று விண்­ணில் சீறிப்­பாய்ந்த இந்­தி­யா­வின் பி.எஸ்.எல்.வி.சி-55 உந்­து­க­ணை­யின் பய­ணம் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது.

இந்­தி­யா­வின் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள சதீஷ் தவான் விண்­வெளி ஆய்வு மையத்­தில் உள்ள முதல் ஏவு­த­ளத்­தில் இருந்து உந்து­கணை விண்­ணில் ஏவப்­பட்­டது. டெலி­யோஸ்-2 செயற்­கைக் கோளு­டன் 16 கிலோ எடை கொண்ட ‘லுமி­லைட்-4’ என்ற சிறிய செயற்­கைக்­கோ­ளும் விண்­ணில் ஏவப்­பட்­டது.

நேற்று மதி­யம் இரண்டு செயற்­கைக் கோள்­க­ளை­யும் வெற்­றி­க­ர­மாக குறிப்­பிட்ட பூமி வட்­டப்­பா­தை­யில் இஸ்ரோ விஞ்­ஞா­னி­கள் நிலை­நி­றுத்­தி­னர்.

இதற்கு முன்­னர் 2015ஆம் ஆண்டு டிசம்­பர் 16ஆம் தேதி டெலி­யோஸ்-1 செயற்­கைக்­கோளை பி.எஸ்.எல்.வி. சி-29 எனும் உந்­து­கணை மூலம் வெற்­றி­க­ர­மாக விண்­ணில் நிலை­நி­றுத்­தப்­பட்­டது.

டெலி­யோஸ்-2 செயற்­கைக்­கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரி­டர் கண்­கா­ணிப்பு உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்­களை பெற முடி­யும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!